பக்கம் எண் :

கற்பனை 131

Untitled Document

கொடிகள் மிகப்பலவாய் நெருங்கியிருத்தலால், வானளாவி உயர்ந்த
சோலைபோல்   தோன்றுகின்றன. மாடத்தின் தோரணம் அமைந்த
முகப்பு மிக  உயரமாக உள்ளபடியால், வானத்தே திரியும் சந்திரன் அவ்வழியாகச்    செல்லும்போது தவழ்ந்து ஏறும்படியாக உள்ளது.
சந்திரன் அவ்வாறு தவழ்ந்து செல்லும் காட்சியைக் காண்கின்றனர்
மாடியில்    உள்ள   மகளிர்.  அவர்கள் அப்போது மது உண்டு
மயங்கிய நிலையில்   இருப்பதால்  சந்திரனைத் தேன்கூடு என்று
எண்ணிவிடுகின்றனர்.   உடனே தம் காதலரை அழைத்து, "இந்தக்
கூட்டின் தேன்   வேண்டும்.   இதைக்   கொணர்ந்து  தாருங்கள்,
வாருங்கள்" என்று   கை   கூப்பி வேண்டுகிறார்கள். காதலராகிய
ஆடவர் உடனே   வந்து   சந்திரனைப்  பற்றிப் பிழிந்து ஊற்றத்
தொடங்குகிறார்கள். அப்போது சந்திரன்  நொந்து, "அய்யோ, இது
தண்டனையாக முடிந்ததே!   நான் உங்கள் காதலியரின் ஒளிமிக்க
முகத்துக்கு ஒப்பானவன்     என்று    இனிச் சொல்ல மாட்டேன்.
என்னை உயிரோடு விடுங்கள்"   என்று  மன்னிப்புக் கோருகிறான்.
உடனே அவர்கள் சந்திரனை விட்டுவிடுகிறார்கள்.சந்திரன், குடித்து
மயங்கிய   அவர்களிடமிருந்து  விடுதலை  பெற்றோம் என்று மிக
மகிழ்கிறான்.

     துளிதூங்கு மழைமுகிற் படலம் கிழிக்கும்
          துகிற்கொடிகள் சோலைசெய்யத்
     தோரண முகப்பில் தவழ்ந்தேறு கலைமதித்
          தோற்றத்தை அறுகால்மடுத்து

     அளிதூங்கு தேனிறால் இது தம்மின் வம்மின்என்று
          அழிநறா ஆர்ந்துநிற்கும்
     அந்நலார் கைகூப்ப ஆடவர் பிழிந்தூற்றும்
          அளவில் அப ராதமிதெனா

     ஒளிதூங்கு முகமதிக்கு ஒப்பென்கி லேன்விடுதிர்
          உயிரொன்றும் எனவிடலும் அவ்
     வுடுபதிக் கடவுள்நற வுண்டமற் றவரினும்
          உய்ந்தோம் ஒழிந்தோமெனாக்
     களிதுங்கு மாடமலி கந்தபுரி -1

     இதுவும் அத்தகைய வெறுங் கற்பனை ஆகும்.


1. குமரகுருபரர், முத்துக்குமாரசாமி - பிள்ளைத்தமிழ், 48,