பாட்டு, உள்ளதை உள்ளவாறே கூறத் தேவை இல்லை; ஆயின் வெறுங்கற்பனை (fancy) யாக அமையாமல், உள்ளதை ஒட்டிக் கூறுவதாகவோ விளக்கிக் கூறுவதாகவோ அமைய வேண்டும் என்று பிராட்லே என்பவர் கூறுவது இங்குக் கருதத் தக்கது.2 தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் இளையவனாக இருந்தபோதே பகையரசர் எழுவரை எதிர்த்துப் போர் புரிந்தவன். போர்க்களத்தில் இளையவனாக நின்ற அக்காட்சியைப் புலவர் பின்வருமாறு உயர்வு நவிற்சியாகப் பாடியுள்ளார்: "குறுந்தொடி அணிந்திருந்து நீக்கிய சிறுபிள்ளை கையில் வில்லைப் பற்றிக் கொண்டு தேர்த்தட்டில் ஏறி நிற்கிறான். குழந்தைப் பருவத்தில் அணிந்த தாலியை இன்னும் களையவில்லை; அதற்குள் தார் அணிந்து வந்து நிற்கின்றான்; பால் குடிப்பதை விட்டு இன்றுதான் சோறு உண்ணத் தொடங்கியவன் இவன்!" குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் யார்கொல் வாழ்கஅவன் கண்ணி தார்பூண்டு தாலி களைந்தன்றும் இலனே பால்விட்டு அயினியும் இன்று அயின் றனனே...1 நலங்கிள்ளி என்னும் சோழன் பெரும்படை உடையவன். அவனுடைய படையின் பெருமையை விளக்கப் புலவர் அமைத்த கற்பனை உயர்வு நவிற்சியாக உள்ளது. அவனுடைய பெரும்படை புறப்பட்டால், பரந்த உலகத்தையே வலமாக வளைத்துக் கொள்ளத் தக்கதாக இருந்ததாம். அந்தப் படையில் தலைப் ்பகுதியில் இருந்த வீரர் ஒரு பனந்தோப்பின் வழியாகச் சென்ற போது, அங்குக் கிடைத்த பனநுங்கை உண்டனராம்; படையின் இடைப் பகுதியில் இருந்தவர் அங்குச் சென்றபோது பனம்பழம் தின்றனராம்; படையின் கடைப் பகுதியில் இருந்த வீரர் சுட்டுத் தின்னப் பனங்கிழங்கு கிடைத்ததாம். இவ்வாறு அந்தப் பெரிய 1. Poetry, though no copy of reality, should not be mere fancy, but should refer to, and interpret, that reality. - A.C. Bradley, Gxfo Lectures on Poetry, p.3. 2. புற. 77 |