பக்கம் எண் :

கற்பனை 133

Untitled Document

படை   புறப்பட்டு   நகர்வதற்கு ஆண்டின் பெரும் பகுதி ஆகும்
என்று பாடியுள்ளார்.

      தலையோர் நுங்கின் தீஞ்சேறு மிசைய
     இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
     கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
     நிலமலர் வையத்து வலமுறை வளைஇ
     வேந்துபீடு அழித்த ஏந்துவேல் தானை...1


     நாட்டில்    வெள்ளம் பரந்து ஓடும்போது, அங்கங்கே மடை
அடைப்பவர்   மண்ணைத் தேடாமல், மீனால் அடைத்து நிறுத்துவ
தாகப் புலவர் பாடியுள்ளார்.

      தண்புனல் பரந்த பூசல் மண்மறுத்து
     மீனிற் செறுக்கும் யாணர்...2


     அந்நாட்டின்   வளத்தையும்  குன்றாத  புது வருவாயையும்
விளக்கும் பொருட்டு இவ்வாறு பாடியுள்ளார்.

     இந்த உயர்வு நவிற்சிகளில் உள்ளனவும் வெறுங்கற்பனையின்
பாற் படுவனவாகும்.

உண்மை உடையன

     ஒரு நாட்டை வளம் மிக்க நாடாகக் கண்ட புலவர், அதைக்
கற்பனை செய்யும்போது  வெறுங்கற்பனை  என்னும்  அளவிற்குச்
செல்லாமல்,  உள்ளம் விழைந்தவாறு அமைத்துக் கூறுதல் உண்டு.
எடுத்துக்காட்டு:

     எருமை வயல் பகுதியில் நடக்கிறது. அதன்  கால்களின் கீழ்
கொழுமையான  மீன்கள்   அகப்பட்டு   (நசுங்க வில்லை, பெரிய
மீன்களாதலின்)   துண்டிக்கப்படுகின்றன. அங்கே உள்ள வளமான
இதழ்களை உடைய   கழுநீர்ப் பூக்களை எருமை மேய்கிறது. பிறகு
மிளகுக் கொடி   படர்ந்து  ஏறிய  பலாமரத்தின் நிழலில் உதிர்ந்த
காட்டுமல்லிகைப்    பூக்களின்   மேல் படுக்கிறது. அருகே உள்ள
மஞ்சள்   செடியின்   மெல்லிய இலைகள் அப்போது எருமையின்


     1. புற.225
     2. ஷெ 7