பன்றி அவ்வாறு திரும்பிச் சென்ற போது புலவர் கண்டிருப்பாரா என்பது ஐயம். ஒரு கால் வேட்டுவரோடு மறைந்திருந்து கண்டார் என்றோ, வேட்டுவர் வந்து தம்மிடம் சொல்லக்கேட்டு அறிந்தார் என்றோ கொள்ள இடம் உண்டு. எவ்வாறாயினும், பன்றி மெல்ல மெல்லப் பின் வாங்கித் திரும்பிச் சென்றதற்குப் பல்லியின் ஒலியைக் கேட்டதும் மக்களின் மனம் நன்மை தீமை விளைவுகளைப் பற்றி எண்ணும் பழக்கம் உண்டு. அந்த நம்பிக்கை பன்றிக்கு ஏற்றிச் சொல்லப்பட்டது எனக் கொள்ளலாம். இவ்வாறு தடைகள் சில உள்ள போதிலும், இது நடந்திருக்க இயலாது என்று ஐயுற இடம் இருப்பினும், உண்மையை விட்டுப் பெரிதும் விலகாதது என்பது தெளிவு. ஆதலின் இதனை வெறுங்கற்பனை என ஒதுக்காமல், கற்பனை என்றே கொள்ளல் தகும். மீன் பிடிப்பதற்காக நீர்நிலையில் தூண்டில் எறியப்பட்டது. தூண்டில் முனையில் உள்ள இரையை நாடி வாளை மீன் வந்தது. தூண்டில் முள்ளில் அகப்பட்டு எவ்வாறோ தப்பித்துக்கொண்டது. அதன் பிறகு நீரின் இடையே அந்த வாளைமீன் அசையும் நிழலைக் கண்டது. அது கரையில் வளர்ந்த பிரம்புக் கொடியின் நிழல் ஆகும். பிரம்புக் கொடி தூண்டில்கோல் போல நீண்டு அமைந்தது. ஆகவே அதன் நிழல் நீரில் அசைந்தபோது, வாளைமீன் அதையும் தூண்டில் என்று கருதியதாகப் புலவர் பாடியுள்ளார். நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண்கொளீஇ... பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை நீர்நணிப் பிரம்பின் நடுங்குநிழல் வெரூஉம்..."1 வாளைமீன் தூண்டிலால் துன்புற்றது உண்மை. ஆனால் அந்தத்துன்பநினைவு அதன் உள்ளத்தில் நெடுங்காலம் இருக்காமல் அப்போதே மாறிவிடும்; மறக்கப்படும். அன்றியும் பிரம்பின் நிழலைப் பார்த்ததும் அதைத் தூண்டில் என்று கருதும் அளவிற்கு வாளைமீன் அறிவு வளர்ச்சி உடையது என்று கூறுதல் பொருந்தாது. மேலும் வாளை மீன் பிரம்பின் நிழலுக்கு அஞ்சியது 1. பெருபாணாற்றுப்படை படை, 285-288. |