அறைக ழற்சிலைக் குன்றவர் அகன்புனம் காவற் பறையெ டுத்தொரு கடுவன்நின் றடிப்பதுபாராய் பிறையை எட்டினள் பிடித்திதற் கிதுபிழை என்னாக் கறைது டைக்குறு பேதையோர் கொடிச்சியைக் காணாய்.1 குன்றவர் பெண்ணின் கைக்கு வானத்தில் உள்ள பிறைச் சந்திரன் எட்டியது ஒரு விந்தை; கண்ணாடியின் மாசைத் துடைப்பது போல் பிறைச் சந்திரனைக் கையில் வைத்துக்கொண்டு அதன் களங்கத்தைத் துடைத்தது மற்றொரு விந்தை. அந்த இரண்டும் உண்மை மிகத் திரிந்த கற்பனை ஆகும். பாடுவோர் தம் உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் ஏற்றவாறு பொருள்களைப் புனைந்து கூறுவது இயற்கை. ஆயினும பொருள்களின் உண்மைத்தன்மையே மாறித் திரியும் அளவிற்குப் புனைதல் பொருந்தாது. அவ்வாறு அவற்றை மாற்றியும் திரித்தும் கூறுதல் சிறந்த கற்பனையாகாது என்பர் அறிஞர் ஹட்சன்.2 அறிவியல் வளர்ச்சி கனவு காணும்போது அறிவின் குறுக்கீடு இல்லை என்பது உண்மை. ஆயினும் அறிவின் அடிப்படை உள்ளது. அதுபோலவே கற்பனையின் படைப்பிலும் நுகர்விலும் அறிவு குறுக்கிடாதிருத்தல் நன்மை பயக்கும் எனினும் அறிவு அமைந்த அடிப்படையின் மேல் தான் நல்ல கற்பனை எழ வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக சந்திர கிரகணத்தைக் குறிக்க வந்த புலவர்கள் திங்களைப் பாம்பு விழுங்கியது என்று குறித்துள்ளனர். 1. கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், சித்திரகூடப் படலம். 22. 2. The touch of imagination and feeling upon the touter world may often transfigure, but should never misinerpet or distort it. - W.H. Hudson, An Introduction to the Study of Literature, p.81 The translation of natural facts into terms of our own feelings is wrong only when those feelings are themselves morbid, or in the circmstances unreasonable or illegitimate, or when they are violent as to render our vision of things untrustworthy and our transcript them essentially untrue, Ibid.p.83 |