பக்கம் எண் :

142இலக்கியத் திறன்

Untitled Document

பெய்வதற்காக   மேகம்   தன்னிடம்  எஞ்சியிருந்த பழைய நீரை
மழையாகப் பெய்து விட்டுக் கடலை நோக்கிச் செல்வதாகக் கூறும்
பாட்டும் உள்ளது.

      கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்
     புதுநீர் கொளீஇய உகுத்தரும்
     நொதுமல் வானத்து முழங்குரல் கேட்டே1


        அறிவியல்   வளர்ச்சியால்   இன்று   சிறுவர்களும் இக்
கருத்துகளை   உடன்படுவது  இல்லை. கதிரவன் வெப்பத்தால் நீர்
ஆவியாகி மேகமாக  அமைகின்றது என்ற தெளிவு எல்லோருக்கும்
அமைந்து விட்டது.   ஆதலின்   இனி  அந்தப் பழைய கருத்தை
அடிப்படையாகக்   கொண்டு      கற்பனைகளை     அமைத்தல்
இயலாததாகிவிட்டது. அதனால், அறிவியல் வளர்ச்சியால், கற்பனை
வளம் குறைந்துவிடுமோ என்றும்,  பாட்டு என்னும் கலை வளர்ச்சி
குன்றுமோ  என்றும்  ஹாஸ்லிட், மெக்காலே முதலான அறிஞர்கள்
கவலையுற்றது  போல்  கவலையுற   வேண்டுவதில்லை. அறிவியல்
எவ்வளவு   வளர்ச்சியுற்றாலும்,   அறிவின்  பிடிப்புக்கு உட்படாத
துறைகள் பல இருந்தே தீரும். அவற்றை எட்டுவதற்காகக் கற்பனை
இருந்துவரும்.  அன்றியும், ஒழுங்கற்ற காட்சிகளை ஒழுங்கு படுத்தி
அழகுபெறச்   செய்யும்    வகையிலும்,  காலத்தாலும் இடத்தாலும்
சேய்மையில்   சென்றுள்ளவற்றை   அண்மையனவாகப் படைத்துக்
காட்டும்   வகையிலும்   கற்பனையை நாடும் நாட்டம் குறையாமல்
விளங்கிவரும்.   உள்ள   சிலவற்றோடு   உணர்ந்த  சிலவற்றைக்
கூட்டிப் படைக்கும் கற்பனைப் படைப்பும் இருந்தே வரும்.2

அறிவு கலங்கிய துயர்நிலை

         கார்காலத்தில்   திரும்பி  வருவதாகக் கூறிச் சென்றான்
காதலன்,     கார்காலம்    தொடங்கிவிட்டது,    முல்லைக்கொடி


      

      1. குறுந்தொகை, 51
      2. Haxlitt thought that the progress of science and
even of general   culture   was gradually narrowing the
limits of imagination;  knowledge was threatening to clip
the wings of poesy.
      - S.J.Brown, The Realm of Poetry, p.15

     Macaulay wrote, "we think that, as cultivation
advances, poetry almost necessarily declines,"-Ibid