நீ அலையேசிறுபூவாய்நெடுமாலார்க்குஎன்தூதாய் நோய்எனது நுவலென்ன நுவலாதே இருந்தொழிந்தாய் சாயலொடு மணிமாமை தளிர்ந்தேன்நான் இனிஉனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே1 என்று நம்மாழ்வார் கடலை நோக்கியும் பூவையை நோக்கியும் பாடியுள்ள பாட்டுகள் விழுமிய கற்பனைகளாகும். காதலால் மனம் கலங்கியவர்கள் பறவை விலங்குகளோடும் உயிரிலாப் பொருள்களோடும் பேசுவதாகக் கற்பனை செய்தல் எல்லா நாட்டு இலக்கியங்களிலும் உண்டு. மனம் கலங்கிய மாந்தரின் கூற்றாக அமைவதால், அக்கற்பனைகள் பொருந்துவன ஆகும். 1. இங்குக் கவிஞர் காதலியின் மனநிலையைக் கற்பனை செய்துள்ளார். அந்தக் காதலியோ பித்து பிடித்தவள்போல் கலங்கி யுள்ளாள். கவிஞர், காதலர் பித்தர் ஆகிய மூவர்க்கும் உள்ள கற்பனை ஒரே தன்மையானது என்பதைக் குறித்து ஆங்கிலப் பெரும் புலவர் கூறியுள்ள பின்வரும் கருத்து இங்கு உணரத் தக்கதாகும்:2 ஞாயிறு திங்கள் அறிவே நாணே கடலே கானல் விலங்கே மரனே புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே அவையல பிறவும் நுவலிய நெறியால் 1. திருவாய்மொழி 1-4-8 2. The lunatic, the lover, and the poet Are of imagination all compact... The poet's eye, in a fine frenzy rolling Doth glance from heaven to earth, from earth to heavent And, as imagination bodies froth The forms of things unknown, the poet's pen Turns them to shapes, and gives to airy nothing A local habitation and a name. - Shakespeare, Midsummer-Night's dream, V-1. |