உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவர் அதனுடைய வாழ்விலும் கேடு ஆக்கம் மறைதல் பிறத்தல் ஆகியவை இருத்தலைக் கண்டார். இந்த உண்மையை உணர்த்துவதற்காகத்தான் அறியாத வரையும் அறியச் செய்யும் நோக்கத்தோடு திங்கள் வானத்தில் பலரும் காணத் திரிவதாகக் கருதினார். மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் அறியா தோரையும் அறியக் காட்டித் திங்கட் புத்தேள் திரிதரும்* உண்மையில் திங்கள் வானத்தில் திரியவும் இல்லை. உலகத்தார்க்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கமும் கொள்ளவில்லை. இந்த உண்மை திங்கட்குத் தெரியவும் தெரியாது. ஆயினும் வானத்தில் விளங்கும் திங்களுக்கு இதனைக் கற்பித்துக் கூறினார் புலவர். இவ்வாறு அமையும் கற்பனையைக் கருத்து விளக்கக் கற்பனை (Interpretative imagination) என்பர். கற்பனை :உறுதுணை பொதுவாக, கற்பனை மனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாவது என்பது உள நூலார் கருத்து. அதனாலேயே சிறுவர்க்குக் கதைகள் பல சொல்லுதல் நல்லது என வலியுறுத்துகின்றனர். மனத்தின் உயரம், அதன் கற்பனையாற்றலில் உள்ளது என்றும், அத்தகைய நல்லுணர்வைத் தருவது பாட்டு என்றும் ஆபர்கிராம்பி கருதுகிறார். மனம் பல பொருள்களைப் பற்றிய அறிவு பெறுகிறது. அந்த அறிவு திட்பமும் தெளிவும் வரையறையும் வளமும் உடையதாக வளர்வதற்குக் கற்பனை துணை செய்கிறது. உண்மையை நம் மூளையின் ஒரு பகுதி மட்டும் உணராமல் முழுதுமாய் உணர் வதற்கு - அறிதல், விழைதல், துணிதல் என்பவற்றால் முற்றிலும் உணர்வதற்குக்-கற்பனை துணையாகிறது என்பது அறிஞர் கருத்து.1 * புறநானூறு, 27 1. Imagination is not, a sometimes been conceived a faculty of falsehood or deception, caling up merely fictitious and fantastic views. It is pre-eminently a truthful and truth-seeing faculty, preceiving subtle aspects of truth hidden relations, far reachin ganalogies, which find no entrance to us by any other inlet. |