ஒரு மரத்தை பார்த்து இது நாற்பதடி உயரம் உள்ளது என்பது அறிவியல்; இது வானளாவி உயர்ந்தது என்பது கலை. ஒரு கூட்டத்தைப் பார்த்து, இது ஏறக்குறைய நாற்பதாயிரம் மக்களைக் கொண்டது என்பது அறிவியல்; எள்விழ இடம் இல்லாமல் கூடிய கூட்டம் என்பது கலை. தொட்டவுடன் சுருங்கும் இலைகளை உடைய ஒரு செடியைத் 'தொட்டாற் சுருங்கி' என்று குறிப்பது அறிவியல்; 'என்னைத் தொடாதே' (Touch me not) என்று அது கூறுவதாகக் கற்பனை செய்வது கலை. 'விண்ணை இடிக்கும் தலை இமயம்' *என்பது கலை. விண் என்று ஒன்று இல்லை என்றும், இமயமலைச் சிகரம் எதுவும் அந்த விண்ணைத்தாக்கி இடிப்பதும் இல்லை என்றும் இருபத் தொன்பதாயிரத்து நூற்று நாற்பத்தோரடி உயரம் உடையது என்றும் அறிவது அறிவியல்.
'ஆங்கிலக் கல்வியால் எள்ளளவும் நன்மை கண்டிலேன்; இது உண்மை என்று நாற்பதினாயிரம் கோயிலில் எடுத்துச் சொல்வேன்' என்று உணர்ந்து பாடுவது கலை1"ஆங்கிலக் கல்வியால் பயன் குறைவு; தாய் மொழியின் வாயிலாக நம் நாட்டு * பாரதியார் பாடல்கள், செந்தமிழ் நாடு. 1.செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது தீதெ னக்குப்பல் லாயிரம் சேர்ந்தன நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை நாற்ப தாயிரம் கோயிலில் சொல்லுவேன். -பாரதியார் பாடல்கள், சுயசரிதை, கனவு,29. |