பக்கம் எண் :

154இலக்கியத் திறன்

Untitled Document

எனத் தக்கவாறு   அமைந்த   அமைப்பை  ஒட்டியே - பாட்டின்
உயர்வு மதிக்கத் தக்கது என்பர்.*

     பாட்டின்  பொருளோடு  அதற்கு  அமைந்த வடிவம் ஒன்றி
நிற்பதால்தான்,   சில     பாட்டுகளில்   சொற்களின்   பொருள்
விளங்குவதற்கு   முன்னமே,   புலவர்   உணர்த்தும்   உணர்ச்சி
உள்ளத்தில்     பாய்கின்றது.     அச்   சொற்களின்   பொருள்
விளங்காவிடினும், அவற்றின் ஓசைநயம் உள்ளத்தில் பதிந்து உரிய
உணர்ச்சியைப்   பரப்புகின்றது. பாட்டின்  பொருளுக்கு முன்னமே
அதன்   வடிவம்  நம் உள்ளத்தை ஈர்த்து விடுகின்றது. அவ்வாறு
உள்ளம்   ஓசையின்   உணர்ச்சி  வயப்பட, அந்த உணர்ச்சியால்
சொற்களின்  பொருளும்   ஓரளவு   திரிதல்   உண்டு என்கிறார்
ரிச்சர்ஸ்ட்.  அதனால்   பாட்டுப்   பெரும்   வடிவத்தின் சிறப்பு
எத்தகையது என்பது தெளிவாகின்றது.1

மொழி பெயர்க்க இயலாமை

     பாட்டை   மொழிபெயர்க்க   முடியாது   என்பர்.   அதன்
கருத்தை   வேறுமொழியில்   சொல்ல  முடியாது என்பது அதன்
பொருள்    அன்று.   வேறு  மொழியில்   அந்தக்   கருத்தைச்
சொல்லலாம்;   ஆனால்  பாடியவர்  உணர்ந்த  உணர்ச்சியையும்
கற்பனையையும்   அப்படியே   வேறு  மொழியில்  தர முடியாது.
அவ்வாறு   மொழி  பெயர்க்கும்போது பழைய பொருள் உள்ளது;


     

      * The degree   of purity attained may be teasted by
the   degree in which  we feel it hopeless to convey the
effect   of a poem  or passage in any form but its own,
- A.C. Bradley, Poetry's Sake, p.27
      1. Even   before the words have been intellectually
understood   and   the thoughts the occasio formed and
followed,   the   movement   and sound of the words is
playing   deeply   and intimately upon the interests, How
this   happens   is    a   matter  which  has yet to be
successfully investigated, but that it happens no sensitive
reader of poetry doubts.

     In   nearly   all   poetry the sound and feel of the
words,   what   is often called the form of the poem in
opposition   to   its  content, get to work first, and the
sense  in which the words are taken is subtly influenced
by this fact. - I.A. Richards,Science and poetry, pp. 22,23.