ஆனால் புதிய வடிவம் ஏற்பட்டு விடுகிறது.1 ஆகவே அது பழைய பாட்டு அன்று; புதிய கட்டுரை ஆகும்; அல்லது புதிய பாட்டும் ஆகலாம். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறமொழிப் பாட்டுகளைத் தமிழில் மொழி பெயர்த்தார்; மொழி பெயர்ப்பதில் வல்லவராகவும் விளங்கினார்.ஆனால், ஆசியஜோதி, உமர்கய்யாம் முதலியவை புதிய பாட்டுக்களாக உள்ளன என்றே கூறலாம்;பழைய பொருளே ஆயினும் வடிவம் புதிதாக அமைந்திருப்பதைக் காணலாம் கம்பர், வால்மீகி ராமாயணத்தைத் தமிழாக்கவே முயன்றார்; ஆனால் புதிய காவியமாகப் புதிய வடிவமே பெற்றுவிட்டது. பொறையிருந் தாற்றியென் உயிரும் போற்றினேன் அறையிருங் கழலவன் காணும் ஆசையால் நிறையிரும் பல்பகல் நிருதர் நீள்நகர் சிறையிருந் தேனையப் புனிதன் தீண்டுமோ?2 விற்பெருந் தடந்தோள் வீர வீங்குநீர் இலங்கை வெற்பின் நற்பெருந் தவத்த ளாய நங்கையைக் கண்டேன் அல்லேன் இற்பிறப் பென்ப தொன்றும் இரும்பொறை என்ப தொன்றும் கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன்.3 1. A translation of such poetry is not really the old meaning in a fresh dress; it is a new product, something like the poem, if one chooses to say so, more like it in the aspect if meaning than in the aspect of form. 2. கம்பராமாயணம், சுந்தர காண்டம் உருக் காட்டுப்படலம்,11 3. ஷெ திருவடி தொழுத படலம், 12 |