இவை முதலான கம்பரின் பாட்டுகளைக் கற்றுணர்ந்த உள்ளத்தில், இவை மொழி பெயர்த்த கதையைப் பற்றியன என்ற எண்ணமே எழாத வகையில், புதிய வடிவம் பெற்று விளங்குதல் காணலாம். முல்லை பூத்ததம்மா - இருவாட்சி மொட்ட விழ்ந்ததம்மா மல்லிகைப்பூவும - மலர்ந்துநல் வாசம் வீசுதம்மா. தும்பி பாடுதம்மா - கிளிமயில் சோலை தேடுதம்மா தம்பி எங்கே அம்மா - விளையாடத் தனியே நின்றேனம்மா.
சின்னஞ் சிறுபிஞ்சு - வெள்ளரியில் செழித்தி ருக்குதம்மா கன்னிக் காய்பறிக்கத் - தம்பியும் காணோ மேயம்மா1 இவை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியவை; பெலீசியா ஈமன்ஸ் என்ற அம்மையார் ஆங்கிலத்தில் பாடிய பாட்டுகளைத் தழுவித் தமிழில் பாடியவை. ஆயினும் இவை புதிய வடிவம் பெற்றுப் புதிய பாட்டுகளாகவே வாழ்கின்றன. காரணம் என்ன? கவிமணி ஆங்கிலப் பாட்டுகளை மொழிபெயர்த்துத் தரவில்லை. அப் பாட்டுகளின் உணர்ச்சியைத் தாம் பெற்று, தாம் பெற்ற உணர்ச்சிக்குத் தமிழ் வடிவம் தந்துள்ளார். உணர்ச்சியும் ஒலிநயமும் உணர்ச்சி மிகுந்தபோது, ஒருவருடைய மனத்தில் அசைவு ஏற்படுகிறது. அது இருந்த நிலையில் அமைதியாய் இருப்பதில்லை. அதனால் உடலிலும் அத்தகைய மாறுதல் நிகழ்கிறது. உடலில் எந்த வாயிலாகவேனும் அசைவு புலப்படுகிறது. சிறுவர்களிடத்தில் அதைக் காணலாம். மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டவுடன் சிறுவர் துள்ளுவர், ஓடுவர், பாடுவர், ஆடுவர். மனத்தின் அசைவு 1. மலரும் மாலையும்,முதல்துயரம் |