உறக்கத்தின்போது மனம் இன்புறுவதுபோல், அமைதி காண்பதுபோல், பாட்டின் கற்பனையுலகத்திலும் மனம் இன்புற்று அமைதியைக் காண்பதற்குக் காரணம் இதுவே. பாட்டில் ஒலிநயத்தோடு மற்றொரு வகை நயமும் இருப்பதாகக் கூறுகிறார் பயர் என்பவர்.1 அவர் கருத்துப்படி,அந்த இரண்டாவது நயம் ஒலியில் இருப்பதன்று; பொருளில் இருப்பதாகும். அது உரைநடையில் ஒரு பொருளை விளக்கும் போது எடுத்தும் படுத்தும் அளந்தும் சில கருத்துகளைத் திரும்பத் திரும்பக் கூறுவதில் உள்ள ஒழுங்கு நயமாகும். அதையே அவர் இரண்டாம் வகையான நயம் என்றும், பாட்டில் ஒலிநயம் போலவே இடம் பெறுவது என்றும் குறிப்பிடுகிறார்.* ஓவியக் கலையிலும் சிற்பக் கலையிலும் ஒலி இல்லை எனினும் அவற்றிலும் ஒருவகை நயம் (rhythm) அது வடிவ அமைப்பில் உள்ள ஒழுங்கை ஒட்டிக் கூறப்படுவதாகும். குளத்தின் அலைகளின் அசைவில் ஒரு வகை ஒழுங்கு காணப்படுவதுபோல், நடனக் கலையிலும் (ஒலியில் அல்லாமல்) உடம்பின் அசைவுகளில் ஒருவகை நயம் உள்ளது. இசையிலும் பாட்டிலும் அது சிறப்பாக உணரப்பட்டுப் போற்றப்படுகிறது. கற்பனையும் ஒலிநயமும் ஒரு நாடக மண்டபத்திற்குள் கால்வைத்தவுடன் மேடையில் காண்பன எல்லாம் கற்பனை என்ற எண்ணம் மெல்லத் தோன்றி உள்ளத்தை மயக்கத் தொடங்கும். மேடையில் காணும் பகல் உண்மைப் பகல் அன்று; அங்குக் காணும் நிலவும் உண்மை நிலவு அன்று; அங்கு நடைபெறும் கொலை முதலியனவும் உண்மை அல்ல; நடிக்கும் மாந்தரும் கதைமாந்தர் அல்லர்; ஆயினும் 1. Poetry is rhythmical. Rhythm secures the heightening of phosiological consciousness so as to shut out sensory perceytion of the environment -Christopher Caudwell, illusion and Reality P.224 * In every poem, we can here atleast two distinct rhythms, one is the recurring rhythm, which we have shown to be a complex of accent, metre and sound- pattern. The other is the semantic rhythm of sense, or what is usually felt to be the prose rhythm. - N.Fyre Anatomy of Criticism, P.263 |