பக்கம் எண் :

164இலக்கியத் திறன்

Untitled Document

இசையின் சாரம்

           ஒலிநயம்  என்பது என்ன? பாட்டில் உள்ள ஒலிகள்
ஒலிக்கப்படும்போது   இயங்குகின்றன.*  அவற்றின்  இயக்கத்தில்
ஒருவகை   ஒழுங்கு  அமைந்தால் அதுவே ஒலிநயம் எனப்படும்.
குளத்தில்   அலைகள்   அசைந்தசைந்து இயங்குகின்றன. அவை
கண்டபடி  அசைந்து  எழுந்து விழுவதானால், காண்பவர்க்கு ஓர்
அழகு   தோன்றாது.  ஒலியலைகளும்  ஒழுங்கின்றி இயங்கினால்
செவிக்கு   ஒரு நயம்  தோன்றாது. நயம் (rhythm) தோன்றுமாறு
இயங்குவது எவ்வாறு?   ஒலிகளுக்கு  மூன்று தன்மைகள் உண்டு;
(1) கால அளவு: அதனால் அமையும் நீட்டல் குறுக்கல் வேறுபாடு;
(2) தன்மை:     வன்மையாகவும்   மென்மையாகவும்   ஒலிக்கும்
வேறுபாடு:   (3) ஒலிக்கும்   முறை: எடுத்தும் படுத்தும் ஒலிக்கும்
அழுத்தத்தின்   வேறுபாடு.   இம்   மூவகையாலும்   வேறுபடும்
ஒலிகளை வெவ் வேறு   வகையாக  அமைத்து, வந்த அமைப்பே
திரும்ப திரும்ப வருமாறு   செய்தலால் பிறக்கும் இனிய ஒழுங்கே
ஒலிநயம் எனப்படும்.**

          இசைக்   கலை ஒலிநயமே அடிப்படையாக உடையது;
உணர்ச்சிக்கு    வடிவமாக  ஒலிநயமும்   ஒலிநயத்தின் பயனாக
உணர்ச்சியும் விளங்கும் கலை  அது. மிகப் பெரிய அளவில்,மிகத்
தெளிவான   வடிவில்   இசைத்  துறையில்  விளங்கும் ஒலிநயம், 
இலக்கியத்துறையில் - பாட்டில் - தேவையான  அளவிற்கு   மிக
நுட்பமான  வடிவில்  விளங்குகிறது.  ஒலிநயம் என்பது இசையின்
சாரம் எனக் கூறல் தகும்.

யாப்பு

     ஒலிகள்   அளவாலும்  தன்மையாலும் முயற்சியாலும் வேறு
பட்டு   ஒழுங்காக அமைந்து வந்த அமைப்பே திரும்பத் திரும்ப
வந்து   இனிமை   பயப்பது  ஒலிநயம் எனக் கண்டோம். அந்த


       * தொல்காப்பியம், செய்யுளியல், 1. பேராசிரியர் உரை,

       ** The rhythm of language is not the quality of the
sounds of syllables, but the undulation of the degree of
sounds in whole sentences  .The degree  may concern strength, duration,or pitch of sound;and the undulation is
rhythmical  in  so far as it is a recognizable alternation
of any or all of these variable degrees of sound.
   - L. A bercrombie, Principle of Literary Criticism P.42