ஒலிநயம் இயற்கையாக உணர்ச்சிகளோடு இயைந்து பிறப்பதும் கண்டோம். இயற்கையான இந்த ஒலிநயத்தை வளர்த்து வாய்பாடுகளாக்கி ஒருவகைச் செயற்கை அமைப்பைத் தந்தனர் முன்னோர். அதற்கு யாப்பு (meter) எனப் பெயரிட்டனர்**.யாப்பு மொழிக்கு மொழி வேறுபட்ட போதிலும், எல்லாம் இவ்வாறு அமைந்தவையே ஆகும். ஒலிநயம் யாப்பு இரண்டும், வந்த ஒலியமைப்பே மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கச் செய்து நயம் தருவனவே. அவ்வகையில் இரண்டிற்கும் வேற்றுமை இல்லை. ஒலிநயம் இயற்கையாக அமைத்துக் கொண்டது. ஒலிநயம் பொதுவானது; யாப்பு, அதிலிருந்து சிறப்பாகத் தேர்ந்து அமைத்துக் கொண்டது.* ஒலிநயத்தின் வகைகள் எல்லாம் யாப்பினுள் அடங்குவன அல்ல; தெளிவான சில வகைகள் மட்டுமே யாப்பு எனத் தனியே எடுத்து விளக்கப்படுகின்றன. இவ்வளவே வேறுபாடு. உரைநடையைப் படித்துச் செல்லும்போது, மனம் ஒலிகளைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. அறிவுக்கு மட்டும் ஏதோ செய்தி எட்டுகிறது. உடனே சொற்களும் அவற்றின் ஒலிகளும் மறக்கப் படுகின்றன. ஆனால், பாட்டில் ஓர் அடியைப் படித்து முடித்ததும், அதன் ஒலிநயத்தில் ஈடுபட்ட மனம், அடுத்த அடியைப் படிக்கத் தொடங்கும் போது, மீண்டும் அதே ஒலிநயத்தை எதிர்பார்க்கிறது: எதிர்பார்த்தவாறு அது திரும்ப வந்தபோது மகிழ்ந்து திளைக்கிறது. இதந்தரு மனையின் நீங்கி (தனதன தனன தான) ** Poetry aims at persuation. at making its readers or heareri accept whatit has to give; and it can only do so by appealing to their natural instincts in the mattter.Some kind of pattern they must gassuredlp have in their music... Patttern in vorse we call meter. - P.H.B. Lyon. The Discovery of Poetry. p. 147. * Rhythm and its sppecialised form, metre, depend upon repetition and expectancy... All rhythmical and metrical effects spring from anticipation. As a rule this anticipation is unconscious. - I.A.Richards, Principles of Literary Criticism, p.133 |