பக்கம் எண் :

வடிவம் 167

Untitled Document

என்பது அவர்கள் வடித்துக் கண்டவாய்பாடுகளின்படி மேற்குறித்த
பாட்டின்   யாப்பாகும்.   இவ்வாறு அவர்கள் கண்ட யாப்பின்படி,
வெண்பா,   ஆசிரியப்பா,  கலிப்பா, வஞ்சிப்பா எனப் பா நான்கு
வகைப்படும். அவற்றின் ஓசை  செப்பல் அகவல் துள்ளல் தூங்கல்
எனப்படும். இடைக்காலத்தில்  தாழிசை  துறை விருத்தம் என்னும்
பாவினங்கள்   தோன்றின.   அவற்றுள்  விருத்தம் ஒலிநயத்தைப்
புலப்படுத்துவதில்       தனிச்    சிறப்புடன்     விளங்கியதால்,
பெருஞ்செல்வாக்குப்  பெற்றுப் பற்பல வகையான ஒலி வேறுபாடு
களுடன் வளர்வதாயிற்று.   அந்த   விருத்த  வகைகளுள் ஒன்று
மேற்கண்ட   பாட்டின்   யாப்பு.  தமிழ் யாப்பு முறை தனக்கென
உரியவான  சிறந்த   அமைப்புக்களோடு எளிமையும் இனிமையும்
உடையதாய் விளங்கி வருகிறது.

ஒன்றிவிட உதவுதல்

     இவ்வாறு   திரும்பத்   திரும்ப   எதிர்பார்க்கும்  வகையில்
அமையும்     ஒலியமைப்புகள்   வரையறுத்த    வாய்பாடுகளாக
அமைந்து   யாப்பு  எனப் பெயர் பெறுதல் கண்டோம். படிப்பவர்
பாட்டில் ஒன்றிவிடுமாறு செய்யும்   இதன் பயன் வியக்கத்தக்கதாக
உள்ளது.   ரிச்சர்ட்ஸ் கூறுமாறு, நமக்கு அப்பால்  உள்ள ஒன்றில்
இத்தகைய   வாய்பாடு   உள்ளதாக உணராமல் நாமே அந்த ஒலி
வாய்பாடாக   ஆகிவிடுகிறோம்.1  ஒவ்வொரு முறையும் யாப்பின்
வாய்பாடு ஒலிக்கும்போது, எதிர்பார்க்கும் மனநிலை ஒரு திருப்பம்
உற்று   அசைகிறது என்று, மிகமிக விரிவான உணர்ச்சியலைகளை
அசைத்து இயக்குகிறது என்றும் அவர் கருதுகிறார்.

      நனவுலகத்திலிருந்து    கற்பனையுலகத்திற்குச்   செல்லவும்
உணர்ச்சியனுபவத்தைப்   பெறவும்   ஒலிநயம்  உதவுகிறது என்று
கண்டோம். யாப்பும் அவ்வாறு உதவுவதே ஆகும்;  மனம் அறிவுத்
துறையில்   வேகமாக    இயங்காமல்,   உணர்ச்சி   வயப்பட்டுக்


    1. Metre adds to all the variously fated expectancies
which make up rhythm a definite temporal pattern and its
effect isnot due to our perceiving a pattern in something
outside us, but to our becoming patterned ourselves.With
every beat of the metre a tide of anticipation in us turns
and   swings   as   it does  so extraordinary extensive
sympathetic reverberations:
      - I.A.Richards, Principles of Literary Criticism, p.139