பக்கம் எண் :

வடிவம் 171

Untitled Document

அஞ்சன வண்ணனென் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனை யாலர செய்திய மன்னரும் வந்தாரே
செஞ்சரம் என்பன தீயுமிழ் கின்றன செல்லாவோ
உய்ஞ்சிவர் போய்விடின் நாய்க்குகன் என்றெனை ஏசாரோ.

ஆழநெ டுந்திரை யாறுக டந்திவர் போவாரோ
வேழநெ டும்படை கண்டுவி லங்கிடும் வில்லாளோ
தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ
ஏழமை வேடனி றந்திலன் என்றெனை ஏசாரோ.1

    இந்தப்    பாட்டுகள் குகன் பரதனுடைய சேனையைக் கண்டு
சினத்தால் கொதித்துப் பாடியவை.

     கூவிளம்   கூவிளம் கூவிளம் கூவிளம்   தேமாங்காய் என
விளச்சீர்     நான்கு    முறை அடுக்கி. அடியிறுதியில் சினத்தின்
பெமூச்சுப் போல்   தேமாங்காய்ச்சீர்   நீண்டமைந்து  சினத்தைப்
புலப்படுத்தும் யாப்பாக இருத்தலை உணரலாம்.


நம்பியுமென் நாயகனை ஒக்கின்றான் அயல்நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான் தவவேடம் தலைநின்றான்
துன்பமொரு முடிவில்லைத் திசைநோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பாரோ பிழைப்பென்றான்.

உண்டிடுக்கண் ஒன்றுடையான் உலையாத அன்புடையான்
கொண்டதவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பெல்லாம்
கண்டுணர்ந்து பெயர்கின்றேன்மின்கள நறியென்னாத்
தண்டுறையோர் நாவாயில் ஒருதனியே தான்வந்தான்.2

     இப்பாட்டுகளில்,    குகன்   சினம்   தனிந்த நிலையையும்,
பரதனுடைய வேடம் கண்டு நெஞ்சுருகிய நிலையையும் உணரலாம்.
எல்லாம்     காய்ச்சீராக       அமைந்து,       அவற்றுள்ளும்


     1. கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், குகப் படலம்,
       14 - 15     
     2. ஷெ 30 - 31