| கூவிளங்காய்ச்சீரும் புளிமாங்காய்ச்சீரும் பெருகி, உருகிய நெஞ்ச நிலையைப் புலப்படுத்தல் காணலாம். யாப்பு என்பது செயற்கையாக அமைக்கப்பட்டதாயினும். அதன் அடிப்படையில் ஒலிநயம் இருத்தலால், உணர்ச்சிக்கு மிகப் பொருந்துவதாகும். பாடும் புலவரின் உணர்ச்சிக்கு ஒத்து அமையாத யாப்பு, பாட்டுக்கு இயைந்து வருவதில்லை. ஆதலின் செயற்கையான முயற்சியோடு உணர்ச்சிப் பொருத்தமும் கூடியதே பாட்டுக்கு ஏற்ற யாப்பு எனலாம். அதனாலேயே உரைநடைபோல் அமையாமல் பாட்டின் நடை வேறுபட அமைகிறது. எவ்வளவு எளிய சொற்களால் பாடப்பட்ட பாட்டே ஆயினும் உரைநடைக்கும் அதற்கும் வேறுபாடு இருத்தலைக் காணலாம். காரணம்: உரைநடையில் அமையும் சொற்கள் உணர்ச்சிச் சிறப்பு வேண்டாதவை; யாப்பின் தொடர்பு இல்லாதவை. பாட்டில் அமையும் சொற்கள் உணர்ச்சி வளம் மிக்கவை; யாப்புக்கு இயைந்தவை. கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே உகந்த தண்ணீ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கணிந் தருளே.1 என்னும் பாட்டில் எளிய சொற்களே உள்ள போதிலும், உணர்ச்சிக்கும் யாப்புக்கும் ஏற்றவாறு அமைந்து விளங்குதல் காணலாம்.
யாப்பின் வளர்ச்சி பழைய யாப்பு வகைகளுள் கலிப்பா ஓசைநயம் மிக்கது, ஆயின், வெண்பாவும் ஆசிரியப்பாவும் அத்தகையன அல்ல; அவை நுண்ணிய ஒலி வேறுபாடுகள் சில உடையன எனினும் பலவகை உணர்ச்சிகளுக்கு ஏற்பப் பலவாறு ஓசை வேறுபாடுகளை 1. திருவருட்பா,அருள்விளக்கமாலை |