| அமைத்துக் காட்ட இடம் தருவன அல்ல. உணர்ச்சி வேறுபாடுகள் பல; வெறுப்புச் சிலவகை; விருப்புச் சிலவகை; இன்பம் சிலவகை; துன்பம் சிலவகை; பொங்கும் மகிழ்ச்சி சிலவகை; சோர்வுறும் அழுகை சிலவகை; வீரம் சிலவகை; அச்சம் சிலவகை; இவ்வாறு உணர்ச்சி வேறுபாடுகள் பல. ஆயின் வெண்பாவிலும் ஆசிரியப் பாவிலும் உள்ள ஓசை. வேறுபாடுகளோ மிகச் சிலவகைகளே. ஆதலால், அவற்றை மட்டுமே கொண்டு காவியங்களும் தனிப்பாட்டுகளும் பாடியவர்கள், உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு பாட்டின் ஓசைகளை வேறுபடுத்திக் காட்டுவதில் பெரிதும் வெற்றி பெறவில்லை. ஆற்றல் உடை யோர் ஆற்றல் போற்றாதென் உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின் துஞ்சுபுலி இடறிய சிதடன்போல உய்ந்தனன் பெயர்தலோ அரிதே...1 இது மிக்க சினத்தோடு பாடப்பட்ட பாட்டு. குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும் ஆளன்று என்று வாளின் தப்பார் தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத் தாம் இரந்து உண்ணும் உணவை ஈன்ம ரோஇவ் வுலகத் தானே.2 இது மான உணர்ச்சி மிக்கு நெஞ்சம் புழுங்கிப் பாடப்பட்டதாகும். நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது 1. புறநானூறு, 73 2. ஷெ 74 |