| ஆயினும், பாட்டில், எதுகை நன்கு அமைதலால் ஒலி நயம் சிறந்து விளங்கும் என்பர்1.வந்த ஒலியமைப்பே திரும்பத் திரும்ப வருதல் ஒலிநயம். குறிப்பிட்ட இடத்தில் வந்த ஒலியே திரும்பத் திரும்ப வருதல் எதுகையாகும். அது குறிப்பிட்ட இடத்தில் அடியின் முதலிலோ, இறுதியிலோ வந்தமையும்போது, ஒலிநயத்தின் வாய்பாடு தொடங்கும் இடம் அல்லது முடியும் இடம் என்று அறிவிப்பதாக உதவுவதால் ஒலிநயம் சிறந்து விளங்கும் என்று கருதுவர்.2 செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே3 என்ற பாட்டிலே, போதினிலே - காதினிலே, பேச்சினிலே - மூச்சினிலே என வருவதைத் தமிழில் அடி இயைபு என்பர். அடியின் இறுதியில் உள்ள உயிரெழுத்து மட்டும் ஒன்றிவந்தாலே அமையும். இங்கு 'தினிலே' ச்சினிலே எனப் பல மெய்களும் பல உயிர்களும் ஒன்றி வரக் காண்கிறோம் (Triplerime). ஆங்கிலம் முதலிய மொழிகளில் அடியின் இறுதியில் ஓர் உயிர் ஒன்றி வந்தாலே போதும் என அமைவர். (Singlerime) அடியின் இறுதிச் சொல்லில் ஒன்றி வருதலையே அம்மொழியோர் போற்றுவர். தமிழில் அடியின் முதற் சொல்லில் அவ்வாறு ஒன்றி வருதலே சிறப்பாகப் போற்றப்படுகிறது. அது, அடி எதுகை எனப்படும். மேற்பாட்டில் செந்தமிழ் - தந்தையர் என்ற சொற்களில் அடி எதுகை இருத்தல் காண்க. 1. Rhyme intensifies the effect of rhythm that is natural to all heightened or Impassioned feeling. - C.T.Winchester, Some Principles of Literary Criticism.p.265 2. By making distinctly the close of lines and stanzas it helps to emphasize rhythm. - W.H. Hudson, An introduction to the Study of Literature, p.120
It adds much to the beauty of poetry as musical speech, and therefore to the pleasure which poetry affords-Ibid.
3. பாரதியார் பாடல்கள், செந்தமிழ் நாடு. |