| ஒருமைந்தன் தன்குலத்தக் குள்ளான் என்பதும் உணரான் தருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன் மருமந்தன் தேராழி உறவூர்ந்தான் மனுவேந்தன் அருமந்த அரசாட்சி அரிதோமற் றெளிதோதான்1 என்னும் விருத்தப் பாட்டில், அடி எதுகை நான்கு அடிகளிலும் அமைந்திருத்தலும் 'ருமந்த'எனச் சில உயிரும்சில மெய்யும் ஒன்றி வருதலும் காணலாம். இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் கருவையான் கண்டிலேன் கண்ட தெய்வமே வருக என்று பணித்தனை வானுளோர்க் கொருவ னேயுனை என்றுகொல் காண்பதே2 என்னும் பாட்டில் ஒரு மெய்யும் ஓர் உயிரும் (ர்+உ) ஒன்றி வருகின்றன. ஆசிரியப்பா முதலியவற்றில் இரண்டடியில் மட்டும் அடி எதுகை அமைதல் போதும். உறைபதி அன்றித் துறைகெழு சிறுகுடி கானலஞ் சேர்ப்பன் கொடுமை எற்றி ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள் துஞ்சா துறைநரொ டுசாவாத் துயில்கண் மாக்களொடு நெட்டிராஉடைத்தே3. இவ்வாறுஒரே அடியிலமுதல் சீர்க்கும் மூன்றாம் சீர்க்குமாக (உறை துறை), அல்லது முதல் சீர்க்கும் நான்காம் சீர்க்குமாக (ஆனா- பானாள்) எதுகை அமைதலும் உண்டு. அவை பொழிப்பெதுகை, ஒருஉ எதுகை எனப்படும். இரண்டாம் எழுத்து (உயிர்மெய் அல்லது மெய்) ஒன்றி வருதலே எதுகைஎனப்படும ்(உலகெலாம்- நிலவுலாவிய). இரண்டாம் எழுத்து ஒன்றி வராமல் அதன் இனம் முதலியவை ஒன்றி வருதல் கடையாகு எதுகை(தக்கார்-எச்சத்தால்) என்றும், இரண்டாம் எழுத்து முழுதும் ஒன்றி வருதல் (அகர 1. பெரிய புராணம், திருநகரச் சிறப்பு, 44 2. திருவாசகம், திருச்சதகம், கைம்மாறு கொடுத்தல், 1 3. குறுந்தொகை 145, |