பக்கம் எண் :

வடிவம் 177

Untitled Document

-பகவன்)   இடையாகு   எதுகை   என்றும், இரண்டாம் எழுத்தும்
அடுத்த   எழுத்துக்களும்  ஒன்றி வருதல்  (அறவாழி - பிறவாழி)
தலையாகு எதுகை என்றும் வேறுபடுத்துவர்.

எதுகை தேவையா?

     வரும்   இடங்களை   ஒட்டி  எதுகையை எட்டு வகையாகப்
பாகுபாடு செய்துள்ளனர்  தமிழ் யாப்பிலக்கண நூலார். அவ்வாறே
மற்றத் தொடைகளாகிய   இயைபு,   மோனை, அளபு, என்பனவும்
எட்டு எட்டு   வகையாகப்   பாகுபாடு   செய்யப்படும். இவ்வளவு
விரிவாக  ஐரோப்பிய   மொழியார்   போற்றுவதில்லை.   எதுகை
பாட்டுக்கு   இன்றியமையாதது  அன்று என்றும், ஒலி வாய்பாடுகள்
திரும்பத்     திரும்ப    வருதலாகிய   ஒலி   நயம்   மட்டுமே
இன்றியமையாதது   என்றும், எதுகை இல்லாமலே ஒலிநயம் சிறந்து
விளங்கிப பாட்டுக்கு அழகிய வடிவம்தர முடியும் என்றும் ஆங்கில அறிஞர் சிலர்  கருதுகின்றனர்.   தமிழில்   கூறப்படும் இடையாகு
எதுகையில் (perfect rime)   மெய்யெழுத்தும்    அதைச் சார்ந்த
உயிரெழுத்தும் (உயிர்மெய்யெழுத்து)  ஒன்றிவருதல் (அகர-பகவன்)
(need-dead) கண்டோம். அதுவே மிகை என்று ஆங்கில அறிஞர்
கருதுகின்றனர்.தலையாகு எதுகை(triple rime, double rime) மிகை என்று கருதுதல்   பற்றிக்  கூறல் வேண்டா. 'அறவாழி - பிறிவாழி'
போல் தலையாகு  எதுகையால் ஆங்கிலத்தில் வருவன (grateful-
fate-ful) உண்டு;   அவை எங்கோ சில இடத்தில் அருகி வழங்கு
கின்றன. ஆயின்,    தமிழில் விருத்தப்பாக்களில் அவையே செழித்
துள்ளன. பிரெஞ்சு   மொழிப்பாட்டுகளில்  எதுகைகள் இன்றியமை
யாதனவாக உள்ளன.  ஆயின், ஆங்கிலத்தில் உரைநடை போன்ற
பாட்டுவகை (blank verse)   ஒன்று உள்ளது. அதற்கு எதுகையே
தேவையில்லை எதுகை    என்பது   தேவையற்ற - மிகையான -
அணிகலன் என்று ஆங்கிலப் புலவர் சிலர் கருதுவர்.ஒலிநயத்தை
உணர     வல்ல       நுண்செவி     உடையவர்க்கு   எதுகை
வெறுக்கத்தக்கதாகும்   என்று, எதுகை இல்லாமலே ஒலிநயத்தோடு


     

     1. In recent poetry  there is movement against the
use of rime.     The exponents of the advanced school
denounce it    as "a silly ornament, that is no ornament
at all- a toy trinket added to poetry and as "a nuisance
to he   ear of a   reader   educated to appreciate the
essential qualities of poetry," - S.J.Brown,  The Realm or Poetry, p.39