பக்கம் எண் :

178இலக்கியத் திறன்

Untitled Document

பாட்டுப் பாடல்   வேண்டும்  என்று   கருதுவோர் சிலர் அங்கு
உண்டு1.கன்னடமொழியில் இன்று  எதுகை இல்லாமலே பாட்டுப்
பாடுவோர் உள்ளனர்.  ஒலிநயம் மட்டுமே பாட்டுக்கு இன்றியமை
யாதது என்னும் கொள்கை  உடையவர்கள். அவர்கள் ஐரோப்பிய
நாட்டில் பாட்டு   என்னும்  நங்கை, உள்ள ஒரு சில அணிகளும்
வேண்டா   என்று தள்ளும் நிலையில் உள்ளாள். ஆயின் தமிழ்ப்
பாட்டு என்னும்     நங்கையோ, பண்டு தொட்டு இன்று வரையில்
பெற்றுள்ள பலவகை    அணிகளையும்  ஒன்றுவிடாமல் அணிந்து
சிறப்புற்று உலாவவே விரும்புகிறாள்.


மோனை

    முதலெழுத்து ஒன்றி வருவதாகிய மோனையைப் (alliteration) பொறுத்த வரையில்   மேற்சொன்ன  கருத்து முற்றிலும் பொருந்து
வதாக உள்ளது.   மோனை   ஆங்கிலப்  பாட்டுகளில் பலவற்றில்
இல்லை. தமிழிலோ மோனை  இல்லாப் பாட்டே இல்லை எனலாம்.
ஆங்கிலத்தின்   எதுகை   இல்லாப்   பாட்டுக்கு   ஒருவகையில்
நிகரானதாக உள்ள தமிழ் அகவலிலும் மோனை இல்லாமல் பாட்டு இயற்றப்பட்டதில்லை.

      நீல மேனி வாலிழை பாகத்து
     ஒருவன் இருதாள் நிழற்கீழ்
     மூவகை உலகும் முகிழ்த்தன்றால் முறையே2


என்னும்   பெருந்தேவனாரின்   பாட்டில் முதலிரண்டு அடிகளில்
எதுகை  மட்டும் அமைந்து மோனை இல்லாமல் இருக்க, மூன்றாம்
அடியில் அந்தக் குறையைப் போக்கும் வகையில் மூன்று சீர்களில
மோனை அமைந்துவிட்டது.

     மோனை   செய்யுளுக்கு   இரண்டாம்   தரமானது என்றும்,
எதிர்பாராமல்      வந்து     சேர்ந்திடும்   கவர்ச்சியே   தவிர
இன்றியமையாதது   அன்று  என்றும், வேண்டும் என்றே முயன்று
அமைக்கும் மோனை  செயற்கையானதாக   வெறுப்புத் தரக்கூடும்


     1. Milton disliked it intensely and considered it an
excessive  ornament, and therefore a disfigurement of
verse.- Peter Westland, Literary Appreciation p.118.

     2. ஐங்குறுநூறு,கடவுள்வாழ்த்து