| என்றும், தானாகவே அமைந்து வெளிப்படையாகத் தெரியாமல் வரும் மோனை ஒரு வகையில் அழகு தருகிறது என்றும் வின்செஸ்டர் கூறுகிறார்1. முயற்சி இன்றித் தக்க அளவில் அமையும் எதுகையும் மோனையும் வீணானவை அல்ல; அவை அடிகளை நினைவூட்ட உதவுவதோடு, ஒருவகைக் கவர்ச்சியும் தந்து செவிக்கும் மனத்திற்கும் இனிமை பயந்து, ஆசிரியரின் உணர்ச்சிக்கு ஏற்பக் கற்பவரின் உள்ளத்திலும் உணர்ச்சியலைகளை எழுப்புகின்றன: ஆனால் வலிந்து முயன்று அமைந்த எதுகையும் மோனையும், வியப்புடன் படிப்பவர்க்கு அதற்கு மாறாக வெறுப்பை உண்டாக்கி விடும் என்கிறார் டக்கர் என்னும் அறிஞர்2. ஆகவே, உணர்ச்சியும் கற்பனையும் நன்கு அமைத்துபபாடும் புலவர், பாட்டுக்கு அழகான ஒலிநயம் உள்ள யாப்பு அமைத்துப் பாடுதல் இன்றியமையாதது: அதற்குத் துணையாக எதுகையும் மோனையும் எளிதில் அமைந்தால் அந்த அளவிற்கு அணியெனப் போற்றுதல் நல்லது. அவ்வாறு அல்லாமல் எதுகை மோனை 1. Alliteration is at present only a secondary and incidental charm of verse. If concious or obtrusive, it is likely to offend as artificial but irregular, spontoneous and largely disgursed, it iends a grace which, though often unrecongnized, would be missed if absent. - C.T. Winchestor, Some Principles of Literary Criticism, p.268. Rhyme has been described as the brilliant corncidence of unexpected recurence of syllables and it is a very great ornament to poetry. but poets, in spite of Dr Johnson can please without it, for the spirit of poetry takes material Form in the words themselves and this form is, shaped by the graving tool of metre. - F.W.Felkin, The Craft of the Poet p.65. 2. Rhyme is no vain thing Apart from rememberabelness its purpose is to add a charm to expression, please both ear and mind,and communication to the emotions of the reader a vibration corresponding to that of the writers own. But a forced rhyme will have the contrary effect on reader whose intelligence is alert, language, which is without rhyme. - T.G. Tucker The Judgement and Appreciation of Literature, p.59. |