பக்கம் எண் :

180இலக்கியத் திறன்

Untitled Document

அமைப்பதிலேயே  தம்   முயற்சியைச் செலுத்துவாரானால், பாட் 
டுக்கு   இன்றியமையாத  மற்றவற்றில்   அவர் குறைபட நேரும்,
பாட்டை   ஒரு கலை என்று உணர்வோர், ஒலிநயமுள்ள யாப்பு
அதற்கு    இன்றியமையாதது   என்றும்   எதுகை   முதலியன.
அத்தகையன அல்ல,    புறத்துணையாக   வருவனவே என்றும்
உணர்தல் வேண்டும்1.

ஒலிநயத்திற்கே முதலிடம்

     தமிழிலும்   சிறந்த புலவர்கள் எதுகை முதலியவற்றை விட
ஒலிநயத்திற்குச்   சிறப்பிடம்     தந்துள்ளார்கள்   எனக் கருத
வேண்டியுள்ளது.

      காதலர் தூதொடு வந்த கனவினுக் (கு)
     யாதுசெய் வேன்கொல் விருந்து2


என்பது குறள்.காதலர் என்பதற்கு யாதுசெய் என்பது எதுகையாக
அமைந்துள்ளது  எனினும்,  யாதனின்  என்பது இன்னும் சிறந்த
எதுகையாக அமைந்திருக்கும்.

      காதலர் தூதொடு வந்த கனவினுக்(கு)
     யாதனின் செய்வேன் விருந்து


என்று   அமைந்திருக்கலாம்.  யாதனின்   என்ற     சொல்லும்
திருவள்ளுவரின்  ஆட்சியில் உள்ளது3ஆயின், 'என்ன விருந்து
செய்வேன்'என்ற பேச்சு முறையில் அமைந்தால்,'எதனால் விருந்து


     1. Such alliteration was however so obviously an artifice, a trick to catch attention or fix memory. that  it very   soon passed out of normal literary use and survived only in passages where a special effect was aimed at. P.H.B.Lyon, The Discovery of Poetry, p.157

    While metre is an essential eoncomitant of poetry,
rime is to be regarded as only an accessory.

     - W.H.Hudsom.   An Introduction to the Study of
Literature p.120.

     This is   shown by the largge amount of poetry, including much   of the most important poetry, in the Language, which is without rime. - Ibid. p.123.
     2. திருக்குறள், 1211
     3. திருக்குறள் 314