பக்கம் எண் :

வடிவம் 181

Untitled Document

செய்வேன்'   என்பதைவிட  உணர்ச்சி சிறந்து விளங்குதல் கண்டு
அவ்வாறு அமைத்துள்ளார் எனலாம்.

     செய்வேன்   என்ற   சொல்லைப்  பிரித்து, செய் என்பதை
இரண்டாம்   அடியின்   முதல்   சீருடனும்,   வேன்  என்பதை
இரண்டாம்     சீருடனும்   அமைத்து   வகையுளியாக்கியுள்ளார்.
அதைவிட,

      காதலர் தூதொடு வந்த கனவினுக்(கு)
     யாதுநான் செய்வேன் விருந்து


என அமைத்திருந்தால், மேற்சொன்ன குறை இல்லாமல், வகையுளி
இல்லாமல்   இருந்திருக்கும்.  ஆனால் புலவரின் நுண்ணிய செவி
'காதலர்-யாதுசெய்'   என்பவை  மிக ஒன்றி ஒலி நயம் பயப்பதை
உணர்ந்திருக்கும்;    'காதலர்-யாதுநான்'   என்பவை   அவ்வாறு
ஒன்றாமல்   சிறிது   வேறுபடுவதை உணர்ந்து, ஒலிநயமே பெரிது
எனக்     கருதி,    வகையுளியைப்   பற்றிக்   கவலைப்படாமல்,
'யாதுசெய்வேன்    'கொல் விருந்து' எனப் பாடியுள்ளார் எனலாம்.

     அதனால்     உணர்ச்சிக்கும்   கற்பனைக்கும்   சிறப்பான
முதலிடமும்,   ஒலிநயத்திற்கும்   யாப்புக்கும் அடுத்த இரண்டாம்
இடமும், எதுகை முதலியவற்றிற்கு மூன்றாம் இடமுமே கொடுத்தும்
பழம் புலவர்கள் பாட்டுக்  கலையை வளர்த்தனர் எனக் கருதலாம்.
இடைக் காலத்துப் பாட்டுகளிலும்  பிற்காலப் பாட்டுகளிலும் உள்ள
அவ்வளவு   சிறப்பான எதுகை  மோனைகள் சங்கப் பாட்டுகளில்
இல்லாமை அதனாலேயே என்று அறியலாம்.

யமகம் முதலியன

       சில   நூற்றாண்டுகட்குமுன்,    எதுகை   மோனைகளை
தலையாகெதுகை  முதலியவற்றை-அமைப்பதில் புலவர்க்கு இருந்த
ஆர்வம்,   மெல்லமெல்ல   அவர்களை   வழி தவறி அழைத்துச்
சென்றுவிட்டதும் உண்டு எனலாம்.

அடையப்பன் னாகங் கடிவா யமுதுக வங்கிகுளிர்
அடையப்பன் னாக மருப்பா யுதமிற வன்றுகுன்றால்
அடையப்பன் னாகமிசைந்தாங்கப் பாலற் கருள் செய்ததால்
அடையப்பன் னாகங் கரியா னரங்கனெட் டக்கரமே*


 * திருவரங்கத் தந்தாதி, 27