பக்கம் எண் :

182இலக்கியத் திறன்

Untitled Document

என்ற பாட்டை,
அடையப்பல் நாகம் கடிவாய் அமுதுஉக அங்கிகுளிர்
அடையப்பல் நாக மருப்பு ஆயுதம் இற அன்று குன்றால்அடைஅப்பு அந் நாக மிசைதாங்கப் பாலற்கு அருள்
செய்ததால்
அடைஅப்பன் ஆகம் கரியான் அரங்கன் எட்டு அக்கரமே

என்று   மிக   முயன்று   பிரித்துப்  பாட்டின் பொருளை உணர
வேண்டும்.

     இவ்வாறு பாடுவதில் இருந்த ஆர்வத்தால், முதல் சீர் மட்டும்
அல்லாமல்,  இரண்டாம்  சீரும் ஒன்றி வருமாறு பாடவும் செய்தது.
பொருள்   கொள்ளும்  போது, சொற்களைச் சிதைத்துச் சிதைத்து
வலிந்து   பொருள்  கொள்ள   நேர்ந்தது.   அதனால், பாட்டில்
அமையவேண்டிய     உணர்ச்சியும்   கற்பனையும்   குறையவும்
மறையவும்   தொடங்கின.   பாட்டு என்பது வந்த ஒலிவாய்பாடே
திரும்பத் திரும்ப   வருதல் என்ற நிலை போய், வந்த சொற்களே
திரும்பத் திரும்ப   வருதல்   என்ற   செயற்கையான  நிலையை
அடைந்ததால்,   அது பாட்டு என்னும் தகுதியை இழந்து, வெறுஞ்
செய்யுளாக நிற்கலாயிற்று1,யமகம் திரிபு முதலான பெயர்கள் தந்து
அவற்றைச் சொல்லணிகள் என்று புலவர் சிலர் போற்றியபோதிலும்,
கலையின் பெற்றி உணர்ந்தவர் அவற்றை ஒரு நாளும் போற்றார்.

     வான கந்தரு மிசைய வாயின
     வான கந்தரு மிசைய வாயின
     வான கந்தரு மிசைய வாயின
     வான கந்தரு மிசைய வாயின2


     உமாதரனு மாதரனு
     மாதரனு மாதரனு


     1. For the verse-writer,there is a special temptation
to lapse    into the inadequate or strained or otherwise
jarring word for the sake of rhyme. That is  one of the
literary   sins  into which the call or a  rhyme is apt to
sedure the writer.
     -T.G. Tucker, the   Judgement and Appreciation of
Literature, p.68

      2. தண்டியலங்காரம், சொல்லணியியல், 5, உரை