பக்கம் எண் :

வடிவம் 185

Untitled Document

அறிவுடையோர் பலர்  கூறக் கேட்டிருக்கின்றனர். இஃதுண்மையே
என்பது திண்ணம்.   இவ்வாறவர்கள்   கூறுதற் குற்ற காரணங்கள்
யாவென்று    ஆராய்வோம்.   முதலாவது:     மிறைக்  கவிகள்
பாடுமிடத்து மிக்க காலஞ் செல்லும்;   அப்படிக் காலஞ் சென்றும்
சிற்சில வேளைகளில் அவைகள் பாடுவோரிஷடப்படி யமையாமற்
போவதுமுண்டு. இவ்வாறு   முட்டிமோதி  முனைந்தடித்து மிறைக்
கவிகளைச் சொல்லளவால்    ஒருவாறமைத்து முடித்த பின்னரும்
அவை     சிறந்திருப்பதில்லை.     ஏனென்றால்   அவற்றின்கட்
பொருணயமில்லை.   இரண்டாவது:  கவிகளியற்றுவது யாவர்க்கும்
பயன் படல்   வேண்டுமென்பது   கருதி.   அக் கவிகளினும் சில திரிசொற்களாலமைந்து   விட்டாற்   படிப்பவருட் சிலர் திகைப்பர்.
இவ்வாறிருக்கச் செய்யப்படுங்    கவிகளோ மிறைக் கவிகள்; அம்
மிறைத்   தன்மையோடு     இலக்கணச்   சந்திகளுஞ் செறிந்தன.
எதிர்பாராதபடி சொற்கள்   பிளந்து பிரித்துப் பொருள் கொள்ளக்
கிடந்தன, இப்படியென்றால் இம்மிறைக்கவிகள்  யாருக்குபயோகம்?
மிறைக்   கவிஞன்   தானே  மகிழ்ந்துகொள்ளுதற்கு அவை ஒரு
வேளை   பயன்படலாம்.   'வகையுளி'   என்பதற்கு   வேண்டிய
உதாரணங்கள்   இம்மிறைக்   கவிகளிற்  காணலாம்  மூன்றாவது:
இத்தகைய மிறைக்கவிகள் படிப்போனது காலத்தையும்  வீணாக்கிப்
பலவிடங்களிலும்   அவனை மயங்க வைக்கின்றன.  ஏன்? சிற்சில
சமயங்களிற்     பாடினானையுமே     மயங்க     வைக்கின்றன.
இத்தன்மையான      இடர்ப்பாடுகள்  நிரம்பிய   மிறைக்கவிகள்
நந்தமிழ்ப்புலவர்கள் மனங்களைக் கவரா தொழிவனவாக," *

வசன கவிதை


     இரண்டு  நூற்றாண்டுகளுக்கு முன் இவ்வாறு சொற்களையும்
எழுத்துக்களையுமே   திரும்பத்  திரும்ப வரச் செய்து  செய்யுள்
இயற்றி உணர்ச்சியும் கற்பனையும் இழந்த நிலை கண்டோம். இந்த
நூற்றாண்டிலோ உணர்ச்சியும்கற்பனையும் பெரிதாகக்கொண்டு ஒலி நயத்தைப்     பற்றியும்    யாப்பைப்  பற்றியும்  கவலைப்படாத
நிலை   தோன்றியுள்ளது.  உரை  நடைப்பாட்டு  அல்லது வசன
கவிதை   (prose-poetry)   எனப்படும் புதிய வகையில் அதைக்


     * தமிழ்மொழி வரலாறு, ப, 62-63