பக்கம் எண் :

186இலக்கியத் திறன்

Untitled Document

காணலாம்.    அது    ஆங்கிலேயர்  போற்றும்  எதுகையிலாச்
செய்யுளும் (blank verse)  அன்று; தமிழர் போற்றும ்அகவலும்
அன்று. இந்த   இரண்டிலும்  ஒலிநயம் உண்டு. யாப்பும் உண்டு.
ஆயின், உரைநடைப் பாட்டில்ஒலிநயம் இல்லை;யாப்பும் இல்லை.
உணர்ச்சியும்   கற்பனையும்  சிறந்திருத்தல்  காரணமாகச் சிலர்
இயற்றும் இப் புதுவகைக்கு ஓரளவு மதிப்பு இருந்து வருகிறது.

      உடல் நன்று, புலன்கள் மிகவும் இனியன,
     உயிர் சுவையுடையது.
     மனம் தேன், உணர்வு அமுதம்.
     உணர்வே அமுதம்.

     உணர்வு தெய்வம்

     இது பாரதியார்  பாடியுள்ள வசன கவிதைகளுள் ஒன்றாகும்.
இதில்  ஒலிநயம்   இல்லை;  யாப்பும் இல்லை; எதுகை மோனை
முதலியனவும் இல்லை; நுட்பமான உணர்ச்சி மட்டும் உள்ளது.


     காற்றுக்குக் காது நிலை.
     சிவனுடைய காதிலே காற்று நிற்கின்றான்
     காற்றில்லாவிட்டால்.
     காற்றுக்குக் காதில்லை.

     அவன் செவிட்டான்.

     காதுடையவன் இப்படி இரைச்சலிடுவானா
     காதுடையவன் மேகங்களை ஒன்றோடொன்று
     மோதவிட்டு இடியிடிக்கச் சொல்லி
     வேடிக்கை பார்ப்பாளா?

     காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா
     காற்றை, ஒலியை, வலிமையை, வணங்குகிறோம்.

     இதுவும்   பாரதியார்    பாடியதே;   அத்தகையதே. இதில்
கற்பனை உள்ளது.

சொல்லாட்சி

     உரைநடையில்   ஆளப்படும்    சொற்களுக்கும் பாட்டில்
ஆளப்படும் சொற்களுக்கும்  வேறுபாடு இல்லை. புலவர் அந்தச்