| நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழு நாளே.1 பாட்டில் முதலிரண்டு அடிகளில் செல்வருடைய ஆடம்பரத்தை விளக்கு வனவாக அமைந்து, அடுத்தாற் போல் குழந்தைகளை விளக்குமிடத்தில் குழந்தைகளின் நடை முதலியவை புலப்படுவதற்கு ஏற்ற வகையில் சிறு சிறு சொற்கள் அடுக்கி அமைந்திருத்தல் காணலாம். பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும் வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள். அவ்வயினவ் வாசைதன கத்துடைய அன்னாள் செவ்விமுகம் முன்னியடி செங்கையின் இறைஞ்சா வெவ்வியநெ டுங்கணயில் வீசி அயல் பாரா நவ்வியினொ துங்கியிறை நாணிஅயல் நின்றாள்.2 இப் பாட்டுகளில் வல்லோசை குறைந்து மெல்லோசை மிக்க சொற்கள் பொருந்தி ஆடவரை மயக்கும் நோக்குடன் தன்னை அலங்கரித்துக்கொண்டு மெல்ல நடந்து வரும் நங்கை ஒருத்தியின் காட்சிக்கு ஏற்றவாறு அமைந்திருத்தல் உணரலாம். சொற்கள் மட்டும் அல்லாமல், யாப்பும் அந் நங்கையின் நடைக்கு ஏற்றவாறு அமைந்தமையால் பாட்டுகள் மேலும் சிறப்புறுகின்றன. சுட்டது குரங்கெரி சூறை யாடிடக் கெட்டது கொடிநகர் கிளையும் நண்பரும் பட்டனர் பரிபவம் பரந்த தெங்கனும் இட்டதிவ் வரியணை இருந்த தென்னுடல்3 என்னும் பாட்டில் இராவணனுடைய வீர உணர்ச்சியும் மான 1. புறநானூறு, 188 2. கம்பராமாயணம் ஆரணிய காண்டம், சூர்ப்பணகைப் படலம், 31, 37 3. கம்பராமாயணம் உயுத்த காண்டம், மந்திரப் படலம், 11 |