பக்கம் எண் :

வடிவம் 189

Untitled Document

உணர்ச்சியும்    புலப்படும்   வகையில்   சொற்களும் ஒலிகளும் அமைந்திருத்தல் காணலாம்.

      ஊறுகின் றனகிண றுதிரம் ஒண்ணகர்
     ஆறுகின் றிலதனல் அகிலும் நாவியும்
     கூறுமங் கையர்நறுங் கூந்த லின்சுறு
     நாறுகின் றதுநுகர்ந் திருத்தும் நாமெலாம்

     மற்றில தாயினும் மலைந்த வானரம்
     இற்றில தாகிய தென்னும் வார்த்தையும்
     பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேறலாம்
     முற்றுவ தென்னினிப் பழியின் மூழ்கினோம்1.


     இப்பாட்டுக்களில்  இராவணனது மான உணர்ச்சி புலப்படும்
வகையில் சொற்கள் அமைந்தவை காணலாம்.

      என்னுறு துயர்கண்டும் இடர்உறும் இவள்என்னீர் 
     பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ?
     மன்னுறு துயர்செய்த மறவினை அறியாதேற்
     கென்னுறு வினைகாணா இதுவென உரையாரே2

என்ற    பகுதியில்    கண்ணகியின்    துயரத்தில்   திகைப்புக்
கலந்திருத்தலும்

     சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
     ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம்
     சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்?

என்ற   பகுதியில்   கொடுமையைக்   கடிந்துரைக்கும்   எழுச்சி
இருத்தலும்

     மட்டார் குழலார் பிறந்தபதிப் பிறந்தேன்
     பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில்
     ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என்
     பட்டிமையும் காண்குறுவாய் நீ என்னா விட்டகலா

என்னும்   பகுதியில் பழிவாங்கும் வீரம் புலப்படுத்தலும் காணலாம்.


     1. கம்பராமாயணம் உயுத்த காண்டம், மந்திரப் படலம், 11
     2. சிலப்பதிகாரம், ஊர்சூழ்வரி, 39 - 42