அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை. என்று திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார்1. கூரிய அறிவு உடையவர்களை மரம் என்றும்,நூலறிவு இல்லாதவர்களை விலங்கு என்றும் பழித்த காரணங்கள் ஆராயத்தக்கன. நல்லுணர்ச்சிக்கு அறிவு துணைபுரிய வேண்டும் என்றும், உணர்ச்சி பண்படாத நிலையில் அறிவு பயன்படாது என்றும் கூறும் கருத்துகள் போற்றியுணரத் தக்கன. மனிதன், அறிவுக்கு உரிய மூளையோடு மட்டும் பிறக்க வில்லை; உணர்ச்சிகளும் கற்பனைகளும் கூடிய மனத்தோடும் பிறந்துள்ளான்2. ஆகவே உணர்ச்சி அறிவு இரண்டும் வாழ்வுக்குத் தேவையானவை; இரண்டையும் ஒருங்கே வளர்த்தல் வாழ்வுக்கு நலம் செய்யும். ஒன்றை மட்டும் வளர்த்து, மற்றொன்றைப் புறக்கணித்தல், வாழ்வைக் கெடுக்க வல்லதாகும். அறிவை மட்டும் வளர்த்துக் கலைகளின் வாயிலாக உணர்ச்சியைப் பண்படுத்தாமல் விட்டால், மனிதன் யந்திரம் போன்றவன் ஆவான்; சில வேலைகளில் தன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த அறியாமல் தடுமாறுவான். உணர்ச்சியை மட்டும் வளர்த்து. அறிவைப் புறக்கணித்தால், நடுநிலையான ஆராய்ச்சி செய்யும் ஆற்றலை இழந்துவிடுவான்; நன்மை தீமையை ஆராய்ந்து உண்மை காணும் தன்மை இல்லாமல் வெறியோ ஒரு தலைச் சார்பான போக்கோ உடையவன் ஆவான்.
வாழ்க்கையில் குறை அறிவுத் துறையில் மிக மேம்பட்டவர்களும் சில நெருக் கடியின் போது கலைத் துறையையே மருந்ததாக நாடிப் பயன் பெறுகின்றனர். அத்தகையவர்களுக்குப் பாட்டு நல்கும் இன்பமும் அமைதியும் எத்தகையன என்பதை ஜான் ஸ்டுவர்ட்மில் என்பவரின் 1.திருக்குறள், 997, 410, 422, 315 2.We are not, mere intellectuals Things affect us as creatures of feeling and imagination as well as of under standing. -S.J. Brown, The Realm of Poetry. p.54. |