பக்கம் எண் :

20இலக்கியத் திறன்

Untitled Document

வாழ்க்கை   விளக்கும்.  1928  ஆம் ஆண்டில் அவருக்கு  வயது
இருபத்திரண்டு.   அறிவின் உழைப்பால் மிகக் களைத்துச் சோர்ந்த
மன நிலையில்   அப்போது இருந்தார்அவர்.வாழ்க்கையில்  ஊக்கம்
இழந்தவராய் மிகக் கலங்கியிருந்தார். அந்த  நிலையில்  வோர்ட்ஸ்
வொர்த் என்ற ஆங்கிலக்  கவிஞரின். பாட்டுத் தொகுதி  ஒன்றைப்
படிக்கத் தொடங்கினார்.  தம் மனசசோர்வை  அது மாற்றும்  என்ற
நம்பிக்கையோடு    படிக்கவில்லை.    ஆனால்     அந்த நூலால்
வியக்கத்தக்க வகையில் இவர் ஊக்கமும்  ஆறுதலும்பெற்றார். "என்
மன நிலைக்கு  வோர்ட்ஸ்வொர்த் பாட்டுகள்  மருந்தாக  இருந்தன.
காரணம் என்ன?  அவை புறத்து அழகை  விளக்கவில்லை; அகத்து
உணர்ச்சியையும்,     அந்த உணர்ச்சியோடு  இயைந்த கருத்தையும்
அழகின்     எழுச்சியோடு    எடுத்துரைத்தன.    உணர்ச்சிகளின்
பண்பாடாக அவை    இருந்தன. அத்தகைய பண்பாட்டையே  என்
மனம் நாடியது. அவற்றில்,     அகமகிழ்ச்சிக்கு உரிய நல்  விருந்து
எனக்குக் கிடைத்தது;      அவற்றை  எல்லாரும்  பெற்று நுகரலாம்;
போராட்டமோ     குறைபாடோ    அங்கு  இல்லை. மனிதனுடைய
உடல் நிலையும்   சமுதாயச்     சூழ்நிலையும்   சீர்ப்படச் சீர்ப்பட,
அவை மேலும் சிறந்து    அமையக்கூடியன. வாழ்க்கையின்  பெரிய
பொல்லாங்கு    எல்லாம்  தவிர்க்கப்பட்ட   பிறகு,     பெறத்தக்க
நிலையான      இன்பம்     எவ்வாறு    இருக்கும்     என்பதை
அப்பாட்டுகளால்  யான்  அறிந்தேன்.அவற்றின் பயனாக    உடனே
யான்  முன்னிலும் நன்னிலை எய்தி மகிழ்ச்சியுற்றேன்"  என்று அவர்
தம் வாழ்க்கை வரலாற்றில் குறித்துள்ளார்.

    அவரைப்   போல்   தம்   வாழ்நாளில்   ஒருநாள் நெருக்கடி
நேர்ந்து    சோர்ந்து  கலங்கும்  அறிஞர் பலர் உள்ளனர் எனலாம்.
ஜான் ஸ்டுவர்ட் மில்   தம்  வாழ்க்கை   வரலாற்றை  எழுதி  இந்த
உண்மையை ஒளிக்காமல்   புலப்படுத்தினார். அவரைப்  போல் மற்ற
அறிஞர்களும் தம்    குறையை   மறைக்காமல்  எடுத்துரைக்க முன்
வந்தால்,  ண்மை     புலப்படும்      எடுத்துரைப்பவர் ஒரு சிலரே.
ஆதலின்,     அறிவின்  வளர்ச்சியே பெரிது என்று உலகம் மயங்கி
நிற்கின்றது.
சமுதாய மேம்பாடு

    அறிவியல்     துறையில்      மிக   மேம்பட்டு   முற்போக்கு
அடைந்துள்ள     இன்றைய    உலகத்தைப் பற்றிச் சான்றோர் பலர்
கவலைப்படும்    நிலை    உள்ளது.அறிவியலின் துணையால் பற்பல