பக்கம் எண் :

அறிவியலும் கலையும் 21

Untitled Document

கருவிகளையும்     நலன்களையும்  பெருக்கிக்  கொண்டுள்ள மனித
இனம்,    விரைவில்    தன்னைத்   தானே   அழித்துக்  கொண்டு
மாய்ந்திடுமோ    என்று    கலங்குவோரும்      உள்ளனர். இன்று
பெற்றுள்ள    ஆக்கத்திற்கு    இடையே    புரட்டு,  பித்தலாட்டம்,
ஒழுங்கின்மை,    தன்னல   முனைப்பு,     சாதி  மத  நிற  வெறி
முதலியவற்றைக்    கண்டு நொந்து வருந்துவோர்  பலர். இவற்றைப்
போக்கவழி காணாத அறிவின் வளர்ச்சியால்  பயன்  என்ன? குறை
தீர்க்க வழி என்ன? அறிஞர் சிலர் அஞ்சாமல் முன்வந்து, சமுதாயம்
மூளையை    வளர்த்தது    போலவே, உள்ளத்தையும்  பண்படுத்த
வேண்டும் என்று  கூறத்      தலைப்பட்டுள்ளனர்.அறிவே வாழ்வை
இயக்குவது    என்ற  எண்ணம்   தளர்ந்து உணர்ச்சியே  வாழ்வை
இயக்குவது     என்று  உண்மை    காண்கின்றனர்.பாட்டு முதலிய
கலைகளின்   வாயிலாக    உணர்ச்சியைப்  பயன்படுத்தினால்தான்,
அறிவு     நன்னெறியில்    உழைக்கும், அந்த    நல்லறிவாலேயே
நற்செயல்கள்     பெருக முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.*

          அறிவு உணர்ச்சி இரண்டனுள்  உணர்ச்சியே  மனிதனை
இயக்குவது என்றும்,     அறிவு அதற்குத் துணை செய்வது என்றும்
அறிஞர்    கூறுவர்.     மனிதன்     விருப்புவெறுப்பு   உணர்ச்சி
வடிவானவன் ;    அறிவு    அவனுடைய    அமைப்பில் முதலிடம்
பெறவில்லை     என்பர்.        ஆகவே, தனிமனிதன்   வாழ்வில்
சிறந்துள்ள உணர்ச்சியின்   பண்பாடே   சமுதாய   மேம்பாட்டுக்கு
இன்றியமையாததாகும்.

புலனடக்கம்

       மனிதன் உணர்ச்சி  இல்லாமல்  வாழ முடியாது, காட்டிற்கும்
மலைக்கும்  சென்று  புலன்களை  ஒறுத்து  உணர்ச்சிகளை  அடக்கி
வாழும் முனிவர்க்கும   தவத்தை விட்டுச்  சிறிது  நீங்கி  வெளிவந்த