பக்கம் எண் :

வடிவம் 191

Untitled Document

     இவற்றில்   அமைந்துள்ள சொற்களின் பொருளை அறிவால்
அறிவதற்கு முன்னமே,புலவரின் உணர்ச்சி நம் உள்ளத்தே சென்று
பாய்ந்துவிடுகிறது.   அவ்வாறு கருத்துக்கு முன் உணர்ச்சி சென்று
பாய்ந்து, கற்பவரின்   உள்ளத்தை மாற்றி விடுகிறது. புலவருடைய
கற்பனையைத்     தெளிவாக     உணரச்   செய்து   விடுகிறது
அதற்கேற்பவே, சொற்களின்  பொருளும் பின்னர் விளக்கமாகிறது
என்கிறார் ரிச்சர்ட்ஸ் என்னும் அறிஞர்.*

இயல்பாக அமைதல்

     உயர்ந்த உணர்ச்சிநிலையின்போது  கவிஞர்க்குத் தாமாகவே
தக்க சொற்கள் வந்து அமைந்து, ஏற்ற  பொருளையும் ஒலியையும்
பயந்து நிற்கும். சினம்   இரக்கம்   முதலிய   உணர்ச்சிகளுக்கும்
பெருமிதம் முதலான மற்ற உணர்ச்சிகளுக்கும்  ஏற்றவாறு சில சில
சொற்கள்   வந்து   அமையும்.   அந்தச்  சொற்களே கற்பவரின்
மனத்தில் சினம்   முதலிய   உணர்ச்சிகளை எழுப்ப வல்லனவாக
விளங்கும்;அவை அந்த உணர்ச்சிகளுக்கு ஏற்ற வன்மை மென்மை
ஒலிகளையும்   பெற்றுக்   கற்பவரின்   உணர்ச்சிகளைத் தூண்ட
வல்லனவாக அமையும்1.


     * Even   before the words have been intelectually
understood and the thoughts the occasion formed and
followed, the    movement and sound of the words is
playing deeply  and intimately upon the interests. How
this happens is a matter which has yet to successfully
investigated, but that it happens no sensitive reader of
poetry doubts.
      - I.A. Richards, Science and poetry, p.22

     In nearly   all   poetry the sound and feel of the
words, what is often   called the form of the poem in
opposite to its content,   get    to work first, and the
sense in which the words are taken is subtly influenced
by this fact. I bid. p.23.

     1. In poetry... t  he   experience itself, the tide of
impulses sweeping   through    the mind, is the source
and   sensation   of    the words. They represent this
experience itself...

     The   words  which seem to be the effect of the
experience in    the  poet,  seem to become the cause
of similar experience in    the reader. They are the key
for this particular combination of impulses.

     - I.A. Richards, Science and Poetry. p.26-27