பக்கம் எண் :

வடிவம் 195

Untitled Document

     கதிரவன்   மேற்கே  மறையும்  நேரத்தில் அந்திவானத்தில்
தோன்றும்   அழகிய   காட்சிகளைப் பாரதியார் வருணித்துள்ளார்.
அந்திவானத்தில்    பொன்   ஓடைகள்,   தங்கத்தீவுகள்,   நீலப்
பொய்கைகள்.   கரிய பெரும் பூதங்கள், தங்கத் தோணிகள், கருஞ்
சிகரங்கள்,   தங்கத்    திமிங்கிலங்கள்   போன்ற   மேகங்களின்
காட்சிகளைக்   காண்கிறார். அவை ஓடைகள் தீவுகள் முதலியவை
களைப்   போன்றவை   என்று   கூறாமல்,    ஓடைகள் தீவுகள்
முதலானவை   வானத்திலே   இருப்பதாகவே கூறுகிறார். ஒன்றை
மற்றொன்றோடு   ஒப்பிட்டுக்  காணாமல், அவ்வாறு ஒன்றிலேயே
மற்றொன்றைக் காணுதல் உருவகமாகும்.

      பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
     எத்தனை தீப்பட்டு எரிவன! ஓகோ!
     என்னடீ இந்த வண்ணத்து இயல்புகள்!
     எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
     தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி
     விட்டஓடைகள்! வெம்மை தோன்றாமே
     எரிந்திடும் தங்கத் தீவுகள்! பாரடீ!
     நீலப் பொய்கைகள்! அடடா நீல
     வண்ணம் ஒன்றில் எத்தனை வகையடீ!
     எத்தனை செம்மை! பசுமையும் கருமையும்
     எத்தனை! கரிய பெரும் பெரும் பூதம்!
     நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத்
     தோணிகள்! சுடரொளிப் பொற்கரை யிட்ட
     கருஞ்சி கரங்கள்! காணடி ஆங்குத்
     தங்கத் திமிங்கலம் தாம்பல மிதக்கும்
     இருட்கடல்; ஆஹா எங்கு நோக்கினும்
     ஒளித்திரள்! ஒளித்திரள்! வண்ணக்களஞ்சியம்

     உருவகம்   இவ்வாறு உணர்ச்சியைப் பெருக்கும் ஆற்றலைச்
சிறு சிறு   சொற்களாலும்   அறியலாம்.  மனம் இருண்டது என்று
சொல்லும்போது   இருண்டது என்ற அந்தச் சிறு சொல் உணர்ச்சி
மிக்க   பொருள்   பெற்றுவிட்டது.   வானம்  ஒளியிழந்து இருள்
சூழ்ந்ததுபோல  ்மனம் நம்பிக்கை இழந்து கவலை சூழ்ந்தது என்று