| வேற்றுப் பொருள்வைப்பணி, வேற்றுமையணி விபாவனையணி, ஒட்டணி, தற்குறிப்பேற்றவணி முதலிய சில அணிகள் சிறப்புடையனவே ஆயினும், அவற்றுள் எல்லாம் இரு பொருளை ஒப்பிட்டுக் கூறும் கருத்து வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ இருத்தலால், அவற்றை உவமையின் திரிபுகளாகவே கொள்ளலாம்.* இவ்வாறு கலைத்திறங்களை ஆராய்ந்து பெயரும் இலக்கணமும் வகுப்பதில் ஒரு குறையும் உள்ளது1 பெயர்களிலும் இலக்கணங்களிலும் மகிழ்ந்து கலைப் பயனைப் பெற முயலாமல் போதலே அந்தக் குறையாகும். பாட்டின் உணர்ச்சியையும் கற்பனையையும் போற்றி இன்புறாமல் பாட்டில்' அமைந்த அணி *இனி இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும் சொல்லதிகாரத்தினுள்ளும் செய்யுளியலுள்ளும் சொல்லுகின்ற சில பொருள்களையும் வாங்கிக் கொண்டு மற்றவை செய்யுட்கண்ணே அணியாமென இக்காலத்தாசிரியர் நூல் செய்தாரு முளர் -அவை ஒருதலையாகச் செய்யுட்கு அணியென்று இலக்கணங் கூறப்படா. - பேராசிரியர் உரை, தொல்காப்பியம், உவமவியல், 37. எல்லாவித அலங்காரங்களும் உவமையணியின் விஸ்தாரங்களைத் தவிர, வேறொன்றும் இல்லை; உபமாலங்காரமே அலங்கார சாஸ்திரத்தின் பிராணன், என்று பழைய இலக்கணக காரர் சொல்லுகிறார்கள். - பாரதியார் கட்டுரைகள், கலைகள்,மாலை (1) இப்பொருளணிகளிற் பல உவமமென்ற ஓரணியின் அடியாகவே தோன்றின என்பது பல்லோர் துணிபு. 1. Analysis must not be allowed to outrun its proper purpose and to become and end itself; if we are right in considering how a great piece of literature has come to be what it is still with the work as it is that we have mainly to do. To stand before a picture and to forget its totality of quality and effects as a picture in the interest which the method and technique of the painter may arouse, is to confuse the means of artistic study with the end which should always be kept in view. So it is with the study of Piece of Literary art. - W.H. Hudson, An Introduction to the Study of Literature, p.62. |