| முதலியவற்றைப் பாராட்டி மகிழ்தல். நல்ல ஓவியத்தைக் கண்ட அதன் அழகில் திளைக்காமல் ஓவியக் கலைஞனின் கோலையும் வண்ணத்தையும் முறையையும் ஆராய்ந்து காலம் கழித்தலைப் போன்றது; கலைக் கூடத்தின் அழகைக் கண்டு போற்றாமல், கட்டடத்தில் அமைந்த கல் மரம் முதலியவற்றின் விலையையும் கட்டும் தொழில் வகையையும் ஆராய்ந்து காலம் கழித்தலைப் போன்றது. ஆசிரியர் தொல்காப்பியனாரும் இத்துணிபினர் போலும். இது வடமொழி அப்பைய தீக்ஷதரவர்களுக்கும் உடன்பாடாதல், உவமை என்னும் தவலருங் கூத்தி பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து காப்பிய அரங்கிற் கவினுறத் தோன்றி யாப்பிறி புலவர் இதயம் நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே என்ற அவரது சித்திர மீமாஞ்சைக் கூற்றினான் விளங்கும்- வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார், தமிழ்மொழியின் வரலாறு, ப.60,61. இயல்பாக அமைதல் உவமை முதலிய அணிகளை முயன்று சேர்த்தல் கூடாது. சிறந்த புலவர் அவ்வாறு சேர்ப்பதும் இல்லை. புலவருடைய கற்பனையில் ஒரு தன்மையாகத் தோன்றி இயையும் பொருள்கள் தாமே வந்து பொருந்தி உவமை முதலிய அணிகள் அமைய வேண்டும். அவ்வாறு அமையும் போது, கற்பனை வளமுடைய தாகச்சிறக்கும். பாட்டை அழகுபடுத்த வேண்டும் என்று புலவர் முயன்று அமைக்கும் அணிகள் பயனற்றனவாய் நிற்கும்1. 1. Use similes and metaphors to throw light on your meaning, and not merely to decorate your sentences. Indeed of all figures of speech, which are at their best artifices. it is as well to be sparings at first. Those that come of themselves without deliberate search are the most likely to be justifiable. Be suspicious then, of your figures of speech. - P.A.B. Lyon, The Discovery of Poetry, pp.192-3 |