| போன்ற பொருள்களிடத்தில்தான் உணர்ச்சியை வெளியிடுகின்றனர்; தம்மைப் போன்ற பொருள்களின் உணர்ச்சியைத்தான் விரைந்து உணர்கின்றனர். ஆகவே, உயிரில்லாப் பொருள்களையும் உணர்வில்லாப் பொருள்களையும் புலவர் படைக்கும்போது அவற்றிற்கு உயிரும் உணர்வும் ஊட்டி, அவற்றையும் மனிதர் போல் உணரக்கூடியனவாகச் செய்கிறார்; அவ்வாறு செய்தலின் பயனாக,அவை மனித உணர்ச்சிக்கு நெருங்கியனவாக ஆகின்றன.* அதனால்தான்பாட்டுகளில் அம்முறையைக் கையாள்கின்றனர். தொல்காப்பியனார் விளக்கும் மற்றொன்றையும் பிற்காலத்தார் தம் அணியிலக்கணத்தில் போற்ற மறந்தனர். உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும் உணர்வு இல்லாத பொருள்களை உணர்வு உடையன போலவும் பேசாதவற்றைப் பேசுவன போலவும் கற்பனை செய்யும் திறன் (empathy) பாட்டில் அமைதலை ஆங்கில அறிஞரும் எடுத்துப் பாராட்டியுள்ளனர். தொல்காப்பியனார், உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல் மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும் சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச் செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும் அவரவர் உறுபிணி தமபோல் சேர்த்தியும் அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இருபெயர் மூன்றும் உரிய வாக உவம வாயிற் படுத்தலும் உவமம் ஒன்றிடத்து இருவர்க்கும் உரியபாற் கிளவி.# * Through empathy, as we have already seen, the poet naturally and spontaneously attributes to objects and creatures feelings and action which ordinarily are thought of as belonging only to man. In his way he brings such objects close our sympathies, for of all things in the world we respond most readily to those which, however faintly, resemble ourselves. E.G. Moll, The appreciation of Poetry, p.116 # தொல்காப்பியம், பொருளியல்,2. |