| நுண்மை முதலிய பண்புகளும்ஆகும்.அந்த உள்ளப் பண்புகளுக்கு ஏற்ற ஒலி நயமும் பொருளுணர்ச்சியும் உடைய சொற்களைத் தேர்ந்து ஆளும் காரணத்தால், அவர் எழுதும் இலக்கியத்தின் நடைவேறுபாடு அடைகிறது*. நடையும் உள்ளமும் ஒரு புலவரின் நடை அவருடைய உள்ளத்தின் இயல்பை ஒட்டி அமைவதாகும். புலவரின் உள்ளத்தில் உண்மையும் உறுதியும் சிறந்து விளங்கினால் அவருடைய நடை திட்பமும் நுட்பமும் அமைந்ததாகும். அவருடைய உள்ளத்தில் தெளிவு இருந்தால் நடையில் எளிமை விளங்கும். அவருடைய உள்ளத்தில் ஆர்வம் மிகுதியானால், நடையில் ஆற்றல் மிகுதியாகும். அவருடைய உள்ளத்தில் துன்ப உணர்வு பெருகினால், நடையில் சோர்வும் குழைவும் பெருகும் அவருடைய உள்ளத்தில் இன்ப உணர்வு பெருகினால். நடையில் சுவையும் கவர்ச்சியும் பெருகும். அவருடைய உள்ளத்தில் குழப்பமும் கலக்கமும் இருந்தால், நடையில் சிக்கலும் தடுமாற்றமும் காணப்படும்1. அதனால் ஆசிரியரை அவருடைய நடையைக் கொண்டு அறியலாம் என்பர். ஆசிரியரை வேறாகவும் நடையை வேறாகவும் பிரித்தறிய முடியாது. நடைஅவருடைய உள்ளப் பண்போடு அவ்வளவு ஒன்றுபட்டதாகும்2. கலையழகில் தோய்ந்த கலைஞரின் உள்ளத்தில் தெளிவு இருத்தல் வேண்டும்; கலைச் சுவைகளில் திளைத்த காரணத்தால் இனிமை விளங்குதல் வேண்டும். அவருடைய நடை அவற்றைப் புலப்படுத்தல் வேண்டும். * The conception of style is based on the fact that every writer has his own rhythem, as distingtive as his handwriting, and his own imagery, ranging from a preerence for certain vowels and consonants to a preoceupaion with two or three archetypes. N. Fyre, Anatomy of Criticism/ p268. 1. Style will become for us a renl index of personality... I bid p. 30 2. To approach style in this way is to find in it not only the living product of an author's personality,but also a transparent record of his intellectual spiritual and artistic growth... W.H, Hudson, An Introduction to the Study of Literature, P.29 |