பக்கம் எண் :

வடிவம் 203

Untitled Document

     தெளிவும் இனிமையும்,  சிறந்த நடையின் இரண்டு பண்புகள்
என்பது   பலர்க்கும்  உடன்பாடு ஆகும். கம் பர் சிறந்த கவியை
ஆற்றின்   தெளிந்த   ஒழுக்கத்திற்கு   ஒப்புமை   கூறியுள்ளார்.
அணிநயம்,   ஆழ்ந்த   பொருட் சிறப்பு, அகப்பொருள் துறைகள்,
ஐந்திணை வருணனை இவையாவும் இலக்கிய மரபின்படி அமையப்
பெற்று   நல்ல   தெளிவும்  குளிர்ந்த   ஒழுக்கமும் உடையதாக
விளங்குவதே சிறந்த பாட்டு என்பது அவர் கருத்து.

     புவியினுக் கணியாய் ஆன்ற
         பொருள் தந்து புலத்திற் றாகி
     அவியகத் துறைகள் தாங்கி
         ஐந்திணை நெறிய ளாவிச் ச
     வியுறத் தெளிந்து தண்ணென்று
        ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
     கவியெனக் கிடந்த கோதா
        வரியினை வீரர் கண்டார்1

        கம்பர்   கூறியது   போலவே,  ஆங்கிலத்தில் சர் ஜான்
டென்ஹாம்   என்ற   புலவரும்,  நடை என்பது தேம்ஸ் ஆற்றின்
ஓட்டம்போல்  தெளிவும் மென்மையும் வன்மையும் பெற்று விளங்க
வேண்டும் எனக் குறித்துள்ளார்2.

வேறுபடக்காரணம்

        நடை (Style)   என்பது   ஒருவர்க்கு  அமைதல் போல்
இன்னொருவர்க்கு   அமைதல்   இல்லை.   காரணம்,   கலைஞர்
ஒவ்வொருவருடைய      உள்ளமும்,     ஒவ்வொரு   வகையாக
இருத்தலாகும்.கார்லைல் என்பவர் , நடை என்பது ஓர் ஆசிரியரின
மேற்சட்டை   போன்றது    அன்று   என்றும்,  உடம்பின் தோல்
போன்றது என்றும் கூறியுள்ளார்.


     1. கம்பராமாயணம், ஆரணிய காண்டம், சூர்ப்பணகைப்
படலம் 1
    2. Though deep, yet clear; though gentle, yet not d'
without rage, overflowing full,