(இலக்கியப் புலவரின்) இயல்பை விளக்குமிடத்தில், தாம்இன் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்* என்று, பிறர் இன்புறுமாறு செய்யும் இலக்கியத்தின் பெற்றியை எடுத்தோதியுள்ளார். கலைகள் இவ்வாறு கலைஞரின் அனுபவங் களைத் தருதல் இல்லை எனில், இந்தப் பரந்த உலகில் அந்த அனுபவங்கள் பலர்க்குக் கிட்டாமல், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரின் அளவில் நின்று மறைந்து போயிருக்கும்**. பொதுவான ஆசை தாம் பெற்ற புதிய அநுபவத்தைப் பிறர்க்கும் எடுத்துரைக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவர்க்கும் இயல்பாக உள்ளது. கலைத்துறையில் இது மிகச் சிறப்பாகக் காணப்படுகிறது. காட்டிலோ மேட்டிலோ கிழக்கு வானிலோ மேற்கு வானிலோ ஒருவர் புதிய அழகிய காட்சியைக் கண்டார் என்றால் அதைப் பிறர்க்கு உணர்த்துகின்ற வரையில் அவர் உள்ளம் அமைதி அடைவது இல்லை. புதிய விலங்கையோ புதிய பறவையையோ கண்ட வேடனும் அதை ஊரெல்லாம் அறியச் சொல்லி வருகின்றான். புதிதாக எழுதக் கற்றுக்கொண்ட சிறுவனும், புதிதாக மாக்கோலம் போடக் கற்றுக்கொண்ட சிறுமியும் தம் கைத்திறமையைப் பலர்க்கும் காட்டி மகிழ்கிறார்கள். இந்த இயல்பு கலைஞர்க்கு மிகுதி. புதிய உணர்வும் புதிய கற்பனையும் பெற்ற கலைஞர் தம் அனுபவத்தைப் பிறரும் உணருமாறு செய்தலை முதல் கடமையாக்கிக் கொள்கின்றனர். இவ்வாறு உணர்த்தி உணர்த்திப் பயின்ற பயிற்சியால் அவர்கள் பெறும் திறமையே கலையாகிறது. இந்தக் கலைத்திறன் பண்படப் பண்படக் கலைஞர்க்குக் கலையைப் படைக்கும் ஆற்றலும் வளர்கிறது. பிறர்க்கு உணர்த்தும் வேட்கையும் வளர்கிறது. இத்தகைய வேட்கை இல்லையானால் கலைஞர்க்கு ஆழ்ந்த அனுபவங்கள் * திருக்குறள், 399 ** The arts communicate experiences and makes states of mind accessible to the many which otherwise would be only possible to few. -I.A. Richards, Principles of Literary criticism, p. 228. |