ஏற்படுவதற்கும் இடம் இல்லை. தம் அனுபவத்தைப் பலர்க்கு உணர்த்தும் ஆற்றலுக்கும் இடம் இல்லை. ஆகவே உணர்ச்சியும் கற்பனையும் கூடிய அனுபவங்கள் அமைவதற்கும் இது காரணமாகிறது*. சுருங்கக்கூறின் கலை முதலில் கலைஞர் ஒருவர் உள்ளத்தில் அவர் தம் அனுபவமாக எழுந்து வேட்கையோடு படைக்கப்பெற்று, பலருடைய உள்ளத்திலும் ஏறக்குறைய அதே அனுபவத்தை உண்டாக்கி வாழ்கிறது எனலாம். இந்த அனுபவத் திற்கு வடிவுதரும் முறையில்தான் கலையும் சிலவகையாக வளர்ந்து வேறுபடுகிறது. கலைஞர் வல்லமை கார்காலத்தில் காட்டு வழியில் ஒரு மயில் தோகை விரித்து ஆடும் காட்சியை ஒருவர் காண்பாரானால் அதன் அழகிலும் அசைவிலும் அவர்தம் உள்ளத்தைப் பறி கொடுப்பார். சாதாரண மனிதரானால் அவர்தம் ஊர்க்குச் சென்ற பிறகு தாம் பெற்ற அனுபவத்தைப் பலர்க்கும் திண்ணைப் பேச்சாக எடுத்துரைப்பார். தம் அனுபவத்திற்கும் வடிவம் தரவல்ல கலைத்திறன் பெற்றவராக இருந்தால் அவர் திண்ணைமீது இருந்து பேசிக் கழிக்காமல் வீட்டினுள் சென்று காகிதத்திலோ துணியிலோ ஓவியமாகப் படைக்க முயல்வார். படைத்துப் பலரும் கண்டு மகிழச் செய்வார். அந்த அழகிய காட்சியைக் கண்டவர், சிற்பத் திறன் உடையவராக இருந்தால் மண்ணோ மரமோ கல்லோ இரும்போ கொண்டு மயிலின் உருவத்தையே அமைத்து அதன் அழகையும் ஆடலையும் படைத்துக் காட்டுவார். நாட்டியத் திறன் வல்லவராக இருந்தால் அந்த மயில் போலவே அசைந்து ஆடிக்காட்டுவார். ஒலிகளின் ஒழுங்கையும் இனிமையையும் உணர்த்தும் திறன் பெற்ற இசைக் கலைஞராக இருந்தால் மயில் ஆடும்போது அசைந்த அசைவுகளின் அழகுக்கு ஏற்பச் சிலவகை ஒலிகளை எழுப்பி, அவற்றில் அந்த அசைவுகளை அமைத்து இசை எழுப்பிக் * The arts communicate experiences, it has been said, and makes states of mind accessible to the many which otherwise would be only possible to few. To this it might be added that the arts are also a menas by which experience arise in the mind of the artist which would never otherwise come about. I.A. Richards, Principles of Literary Criticism P. 228. |