| பெருமழை பொழிந்தது. ஒரு பெரிய கருநிறமான கல் தொலைவில் தெரிந்தது. யானைபோல் தோன்றிய அந்தப் பெரிய கல் தூசு படிந்து இருப்பது வழக்கம். மழை பெய்த பிறகு தூசும் மாசும் நீங்கியபடியால் அது ஒளி பெற்றுத் தோன்றியது. நீராடி வந்த யானை போல் தோன்றியது. அந்தக் கல் மழைபெய்யும் முன்பும் பெய்த பின்பும் யானை போல் தோன்றியது என்று உணர்ந்த புலவர்,ஒரு நொடிப் பொழுது கல்லையே யானையாகக் கற்பனை செய்தார். தாம் செய்த கற்பனையிலிருந்து மீண்டுவர முடியாமல் அதிலேயே மயங்கினார். அவருடைய உள்ளத்தில் உயிர் அற்ற கல் உயிர் உள்ள யானை ஆயிற்று. பெரு மழை பொழிந்தபோது அந்தக் கல் எங்கும் ஓடி ஒதுங்காமல் மழையிலேயே நின்று வருந்தியது என்று உணர்ந்தார். மழை விட்டபின்பும் களைப்பு மிகுதியால் எங்கும் செல்ல முடியாமல் அங்கேயே ஒருபுறம் தங்கிவிட்டது என்றார்: மாசறக் கழீஇய யானைபோலப் பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல் பைதல் ஒருதலை சேக்கும்...1 கல் உயிருடையது என்றோ ஓடி ஒளியவில்லை என்றோ புலவர் கூறவில்லை. தம் கற்பனையைப் பல அடிகளால் விளக்கவில்லை. உழந்த, சேக்கும் என்ற இரண்டு சொற்களால் தம்கற்பனையும் உணர்ச்சியும் நமக்கு விளங்குமாறு செய்திட்டார். பலவற்றைப் பாடாமல் ஓரிரு குறிப்பைக் கற்பனை செய்வ தாலேயே இயற்கையின் அழகைப் புலவர் மிகத்திறமாக உணர்த ்துதல் உண்டு. வானம் இருண்டு கிடக்கிறது. கருநிறமான மலை உயர்ந்தோங்கி நிற்கிறது. மலையின் உச்சியில் கருநிற மேகங்கள் சூழ்ந்து கிடக்கின்றன. மின்னல் விட்டு விட்டுத் தோன்றுகிறது. இந்தக் காட்சியைப் புலவர் காண்கிறார். மலையின் உச்சியில் காணும் மின்னல், அவருடைய கற்பனையுள்ளத்தில் வேறொரு காட்சியை நினைவூட்டுகிறது. ஒருவர் முகத்தில் கண்ணைத் திறக்கும்போது ஒளி தோன்றுவதில்லை. மூடிய கண்ணைத் 1. குறுந்தொகை, 13 |