பக்கம் எண் :

220இலக்கியத் திறன்

Untitled Document

திறக்கும்போது   ஒளிதோன்றுகிறது.   ஒளியுடைய பொருள்களாக
முகத்தில்   உள்ளவை   கண்ணும்   பல்லுமே ஆகும். அவற்றுள்
கண்களே   புறத்தே   ஒளியுண்டாக்குவதோடு  உள்ள ஒளியைப்
பரப்புவனவுமாகும்.   தவிர,   விட்டு   விட்டு   ஒளிரும் தன்மை
உடையவை கண்களே. ஆகவே, புலவருடைய கற்பனையில், மலை
கண்ணை மூடிக்கொண்டு இருளில்  கிடப்பதாகிறது. மின்னும்போது,
கண் திறந்து   பார்ப்பது  போல் ஆகிறது. மின்னல் விட்டு விட்டு
ஒளி வீசுவதால், அடிக்கடி இமை  திறந்து பார்த்து மூடும் கண்கள
உவமையாகின்றன,   இருண்ட   சூழலில்   உச்சியில்   மின்னும்
மேகத்தை  உடைய மலை, கண்ணைத் திறந்து திறந்து இமைப்பது
போல் தோன்றுகிறது.

     மலை இமைப்பது போல் மின்னி1.

     இவ்வளவு  கற்பனையும்  இமைப்பது என்ற ஒரு சொல்லால்
பெற வைத்தார் புலவர்.

     புலவர்   மலையின்  மின்னலில்   விழியின் இமைத்தலைக்
கற்பனை செய்யாதவராக இருந்திருப்பின், இவ்வாறு அந்த அழகிய
காட்சியைப் பாடும் திறன் பெற்றிருத்தல் இயலாது; பாடுதற்கு ஏற்ற
அகத்தெழுச்சி (inspiration)  அவர்க்கு ஏற்பட்டிருக்காது. ஆகவே
இத்தகைய    பாட்டின்  பிறப்புக்கே கற்பனையின் அகத்தெழுச்சி
காரணம் எனல் வேண்டும்.

தம்திறன்அறியார்

     கலைஞர், உணர்த்தும் திறனோடு தம் கலையைப் படைத்துத்
தருவதற்கு என்ன வழிகளைக் கையாளுகிறார்? உணர்ச்சி, கற்பனை,
வடிவம் என்பவற்றை எடுத்துரைத்து விளக்கம் கூறலாம். ஆயினும்,
அவர் கலையைப்படைத்ததற்குக் காரணமான திறன் கலைஞர்க்கே
தெரியும்; பிறர் உணர்வதற்கு அரிதாகும். கலைஞர்க்கும் படைக்கத்
தெரியுமே தவிர, எப்படிப்  படைக்க முடிகிறது என்பது தெரியாது.
படைப்புத் திறன் உண்டே  அல்லாமல், தம் படைப்புமுறை பற்றி


     1. நற்றிணை. 112