| விளக்கும் திறன் இல்லை எனலாம்1. ஒரு பாட்டைப் பாடும் புலவர், முன்னமே தெளிவாக வரையறையுடன் தெரிந்த ஒரு பொருள் பற்றிப் பாடுகிறார் என்று கூறல் இயலாது. ஏதோ ஒரு வகையாகக் கூடிய அனுபவம் தெளிவில்லாமல் குழப்பமாக அவருடைய உள்ளத்தில் கிடக்கிறது. அந்த அனுபவம் அவர் வாயிலாக ஒழுங்கும் இயைபும் பெற்று உரிமையுடன் புலப்பட முயல்கிறது2 தெளிவாக வளர்ந்து விளக்கம் பெற முயல்கிறது. அம்முயற்சிக்குப் புலவர் கருவியாக இருக்கிறார்; காற்று உள் புகுந்து இசை எழுப்புவதற்குக் குழல் கருவியாக இருப்பதுபோல், அந்த அனுபவம் தெளிந்த வடிவம் பெற்று வெளிவருவதற்குப் புலவர் கருவியாக இருக்கிறார்.அவ்வாறு அன்றி, பாடும் அனுபவம் முற்றும் அவருக்கு முன்னமே தெளிவாகத் தெரிந்திருந்தால், அவர் பாடியிருக்கமாட்டார் என்கிறார் பிராட்லே என்ற அறிஞர். பாடிமுடிந்தபிறகே அதன் முழு வடிவம் இன்னது என்று புலவர்க்கே தெரியுமாம். பாடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, அந்த அனுபவத்தின் தலைவராக அவர் இருப்பதில்லை அதன் ஏவாளராகவே இருக்கிறார் அந்த அனுபவமும் அப்போது முழுமை பெறாத ஒன்றாக, வளர்ச்சி பெறாத உடம்பில் கிடக்கும் சிற்றுயிர் போல், இருக்கிறது. அரை குறையான பல கருத்துகளும் ஒரு சில சொற்றொடர்களும் அப்போது புலப்படுமே தவிர அனுபவத் தின் முழுமை புலப்படாது. பாடி முடிந்த பிறகே அதன் முழுமை புலப்பட்டு நிற்கும்3. 1. The means by which he does this are many and varied. Some of them have been mentioned above, but the way in which he uses them is the poet's own secret, something which cannot be taught. He knows, how to do it, but he does not himself know how it is done. -I.A. Richards, Science and Poetry, P.25. 2. The business of the poet, as we have seen, is to give order and coherence, and so freedom to a body of experience. -I.A. Richards, Science and Poetry. P.55. 3. Pure poetry is not the decoration of a preconceived and clearlyh defined matters it spring: from the creative impulse of a vague imaginative mass pressing for development and definition. If the poet already knew exactly what he meant to say, why should he write the poem? |