| உணர்ச்சியின் ஆற்றல் பாட்டுப் பாடி முடிந்த பிறகும், புலவர் தம் அனுபவம் முழுதும் அந்தப் பாட்டின் சொற்களில் இருப்பதாகக் கூறல் இயலாது. அறிவியல் உணர்த்தும் உண்மைகள் சொற்களிலேயே அமைந்திருக்கின்றன. ஆனால் பாட்டின் அனுபவம் அவ்வாறு அமைவதில்லை. சொற்களைக் கடந்தும் பாட்டின் ஒலிநயத்திலும் அமைப்பிலும் அந்த அனுபவம் அமைகிறது. அறிவியல் ஒலிநயம் முதலியவற்றை அறவே ஒதுக்கித் தள்ள, பாட்டோ அவற்றை பயன்படுத்திக்கொண்டு வாழ்கிறது1. உணர்ச்சியோடு ஒருவர் பேசும் போதும், இந்த நிலைமை காணலாம். அவர் தம் உணர்ச்சியை எல்லாம் சொற்களால் புலப்படுத்த முடியாத காரணத்தால், குரல் மாறுதலையும் முகக் குறிப்பையும் பயன்படுத்துகிறார். பாதி உணர்ச்சியை அவற்றால் புலப்படுத்துகிறார் என்று சொல்லும் அளவிற்கு அவை பயன்படுகின்றன. உணர்ச்சியை ஒதுக்கி உண்மையை ஆராயும் தத்துவ அறிஞனுக்கு அவை வேண்டா எனினும், உணர்ச்சியோடு பேசுவோனுக்கு அவை இன்றியமையாதவை ஆகின்றன. உணர்ச்சியான அனுபவத்தை வடித்துத் தரும் புலவனுக்கும் அவை இன்றியமையாதவை ஆகின்றன2. The poem would in fact already be written. For only its comppletion can reveal, even to him exactly what he wanted. When he began and while he was at work, he did not possess his meaning; It possessed him. it was not a fully formed soul asking for a body; it was an inchaote soul in the inchaote body of perhaps two or three vague ideas and a few scattered phrases -A.C., Bradley, for Poetry's Sake. p.28. 1. Not the strict logical sense of what is said, but the tone of voice and the occassion are the primary factors by which we interpret. Science, it is worth nothing, endeavours with increasing success to bar out these factors. I.A.Richards, Science and Poetry, p.23. 2. That which scientific prose is bent on ruthlessly excising namely, the uggestions, the connotation of words-that constitutes in large degree the very stuff with which the poet works. -IL.Lowes, Convention and Revolt in poetry, p. 117. |