| அவ்வாறாயின், சொற்களால் பெரிய பயன் ஒன்றும் இல்லையோ என வினவாம். பயன் உண்டு. ஆயின் அறிவியலில் சொற்களே முழுப் பயன் தருவது போல், பாட்டில் தருவதில்லை. ஏன் எனில், அறிவியலில் அறிஞர் ஒருவர் என்ன கூறுகிறாரோ அதுவே வேண்டுவது. ஆனால், பாட்டில் வேண்டுவது, புலவர் கூறுவது என்ன என்பது அன்று; புலவரின் அனுபவம் என்ன என்பதே ஆகும்1.இப்பாட்டில் புலவர் என்ன சொல்கிறார் என்பது அன்று, புலவர் என்னவாக இருக்கிறார் என்பதே பாட்டில ்உணரத் தக்கது. ஆகவே, பாட்டிற்குப் புலவர் கருவியாக இருத்தல் போலவே, சொற்களும் கருவியாக இருக்கின்றன. அவர் தம் உள்ளத்தின் உணர்ச்சி, தேவையான சொற்களைத் தேவையான முறையில் அமைத்துக் கொள்கிறது எனலாம். இந்தச் சொற்கள் ஏன் அமைந்தன, எங்கிருந்து அமைந்தன என்றால், அவருடைய உள்ளத்தின் அனுபவத்தின் ஆற்றலே காரணம் என்று கூறல் வேண்டும். புத்துணர்ச்சியும் புதுப் பொருளும் காவியம், நாடகம், கதை முதலிய எல்லா இலக்கியங்களிலும் இவ்வாறு சொற்கள் குற்றேவல் புரிவனவே. புலவர் எந்த எந்தத் துறை பற்றி எழுதுகின்றனரோ அந்த அந்தத் துறைக்கு ஏற்ற சொற்கள் எல்லாம் வேண்டும்போது வந்து முன் நிற்கும். பொது மக்களைவிட, இப்புலவர்களுக்கு மிகப் பல சொற்கள் ஆயிரக் கணக்கான சொற்கள் தெரியும் என்பது உண்மையே. அது மட்டும் அல்லாமல்,அச் சொற்களை வேண்டும்போது வேண்டும் வகையில் பயன்படுத்தும் திறனும்அவர்களுக்கு மிகுதி. எல்லோரையும் விடக் கவிஞர்களுக்கு இந்தத் திறன் இயல்பாக அமைந்துள்ளது. அவர்களை அறியாமலே, அவர்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ற சொற்கள் வந்து உரிய இடங்களில் அமைகின்றன;அவைகள் வந்து அமைந்தபிறகு, பொருத்தமாக அமைந்தன, தக்கவாறு அமைந்தன, 1. It is never what a poet says which matters, but what he is. The poet is not writing as a scientist. He uses these words because the interests which the situation calls into play combine to bring them just in thisform, into his consciousness as a means of ordering, controlling and consolidating the whole experience. The experience itself the tide of impulses sweeping through the mind, is the source and the sanction of the words .-I.A. Richards Science and Poetry, p.25. |