பக்கம் எண் :

224இலக்கியத் திறன்

Untitled Document

இவ்வாறு அமைதல் தவிர வேறு வழி இல்லை என்று மன நிறைவு
கொள்ளும்   அளவிற்கே   கவிஞர் நிலை உள்ளது. அதற்குமேல்
கவிஞர் ஒன்றும் அறியார்.   ஏன்  இந்தச் சொற்களை அமைத்தீர்
இத்தகைய ஒலிநயம்   இங்கு  அமைத்த காரணம் என்ன என்னும்
வினாக்களைக்   கவிஞரிடம்   எழுப்பிப்  பயன் இல்லை. கவிஞர்
விடை  கூற   அறியார்;   ஒருகால்,   விடை   கூறினும்,  அது
அறிவுநிலையில்   அவர்கள்  பிறகு   படைத்த  காரணமே தவிர
உண்மைக் காரணம் அன்று1.

     சுடர்செல் வானம் சேப்பப் படர்கூர்ந்து
     எல்லறு பொழுதின் முல்லை மலரும் மாலை
     என்மனார் மயங்கி யோரே
     குடுமிக் கோழி நெடுநகர் இயம்பும்
     பெரும்புலர் விடியலும் மாலை
     பகலும் மாலை துணையி லோர்க்கே2

என்று பிரிவாற்றாமையால், துயரும் காதலி எல்லாம் மாலை என்று
கூறுமிடத்தில்      புலவர்  அமைக்கும்  உணர்ச்சிக்கு ஏற்றவாறு
சொற்கள்   அமைந்துள்ளன.   வானத்தில் சுடர் சென்று மறைதல்,
உள்ளத்தின் ஒளி மங்குவது   போன்ற  நிலையை எடுத்துணர்த்த
உதவுகின்றது. முல்லை மலர்தல்,தலைவி முன்பெல்லாம் விரும்பிய
விருப்பத்தையும்   அதற்கு   இயைந்த பழைய காதல் வாழ்க்கை
யையும் நினைந்து மாலையில் துயருறுதலை     உணர்த்துகின்றது.
உலகத்தாரை     எல்லாம்      பொருட்படுத்தாத  மனநிலையும்
அவர்களின்      சொற்களைப்  பொருளற்றன   என்று  கருதும்


     1. The chief characteristic of poets is their amazing
command   of   words.   This  is not a mere matter of
vocabulary...It is not the quantity  of words a writer has
at his disposal, but the way in  which he disposes them
that gives them hisrank as a poet.   They fall into their
placest without his conscious    control and a feeling of
rightness, of inevitaility is   commonly his sole conscious
ground for his certainly that he has ordered them aright.
It would as a rule be   idle to ask  him why he used a
particular rhythm or sparticular  epithet.   He might give
reasons, but they would probably be mere rationalization
having nothing to do with the matter... I.A. Richards,
Science and Poetry, p.38.

      2. குறுந்தொகை, 234