பக்கம் எண் :

உணர்த்தல் 225

Untitled Document

மனநிலையும்   'மயங்கியோர்'   என்ற   தொடரால்   உணர்த்தப்
படுகின்றன.   விடியலும்   மாலை,   பகலும்   மாலை   என்னும்
சொற்களில் காதலியின் உள்ளக் குமுறல் வெளிப்படுகிறது.

     இப்பாட்டில்   'சுடர் செல் வானம்'   முதலிய  தொடர்களில்
புலவர் அவ்வச் சொற்களைத் தேடி அமைக்கவில்லை. அவருடைய
கற்பனை   யுணர்ச்சிக்கு   ஏற்றவாறு   சொற்கள்   வந்தமைந்தன
என்பதே பொருந்துவதாகும்.

      குழைக்கின்ற கவரி இன்றிக்
        கொற்றவெண் குடையும் இன்றி
     இழைக்கின்ற விதிமுன் செல்லத்
        தருமம்பின் இரங்கி ஏக
     மழைக்குன்றம் அனனயான் மௌலி
        கவித்தனன் வருமென் றென்று
     தழைக்கின்ற உள்ளததன்னாள்
        முன்ஒரு தமியன் சென்றான்*

     இப்பாட்டில்   'குழைக்கின்ற கவரி',   'கொற்ற வெண்குடை'
என்னும் அழகிய தொடர்கள் இராமன் பெறுதற்கிருந்த பேறுகளை
எண்ணி    ஏங்கச்   செய்கின்றன. 'இழைக்கின்ற விதி' என்பதில்
இழைக்கின்ற   என்ற    சொல்   விதியினுடைய   போக்கையும்
ஆற்றலையும்   உணர்த்துகின்றது.  'செல்ல' என்ற சொல்லும் 'ஏக'
என்ற சொல்லும்   ஒரே பொருள் உடையனவாயினும் இப்பாட்டில்
வெவ்வேறு    உணர்ச்சிகளை   உணர்த்துகின்றன;   முன்னைய
சொல்லில் விதியின்  உரிமையும் செல்வாக்கும் புலப்படுவதாகவும்,
பின்னைய   சொல்லில்    தருமத்தின்  தோல்வியும்   சோர்வும்
புலப்படுவதாகவும்  உணர்கின்றோம். 'என்றென்று' என்ற அடுக்கில்
பெற்ற,   தாயின்  உள்ளம் பலமுறை எண்ணி எண்ணிக் கற்பனை
செய்திருந்த   ஆசையும்   ஆவலும் புலனாகின்றன. 'தழைக்கின்ற'
என்ற   சொல்லின்  பொருள். இதற்குமுன் எங்கும் உணராத ஒரு
புதுப்பொருளாக  உள்ளது 'அன்னாள்' என்ற சொல் அத் தாயைத்
தொலைவில்   நிறுத்திக் கட்டி இரக்கமுறச் செய்கிறது. 'ஒரு' என்ற
சொல்லோ,   தாய்   கொண்டிருந்த  ஆசையெல்லாம்   நொடிப்


     * கம்ப ராமாயணம், அயோத்தியா காண்டம், நகர் நீங்கு படலம், 2